LatestNews
திமுகவினர் நடத்தும் பள்ளிகளில் இந்தி கற் றுக் கொடுக்க மாட்டோம் என பெயர் பலகை வைக்க தய ாரா?
இந்தி தெரியாதவர்களை வெளியேறுங்கள் என்று கூறினால் அது தவறானது. அந்தச் சம்பவம் உண்மையாக இருக்கும் பட்சத்தில் முதலமைச்சர் கண்டிப்பான முறையில் நடவடிக்கை எடுப்பார்.
திமுக நடத்தும் பள்ளிகளில் இந்தி கற்றுக் கொடுக்கப்பட மாட்டாது என அறிவிப்பு பலகை வைக்க அவர்கள் தயாராக இருக்கிறார்களா என அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரையில் பேட்டி.
மதுரை தெப்பக்குளத்தில் மதுரை மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் இளைஞர் அணியினருக்கான உறுப்பினர் சேர்க்கை படிவத்தினை மாநகர், வட்ட எம்.ஜி.ஆர் இளைஞர் அணி நிர்வாகிகளுக்கு அமைச்சர் செல்லூர் ராஜீவும் மாநகர் எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளருமான சோலை. ராஜா ஆகியோர் வழங்கினார்கள்.
கூட்டத்திற்கு மதுரை மாநகர் எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளர் சோலை. ராஜா தலைமை ஏற்றார். தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜு கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
முன்னதாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் செல்லூர் ராஜூ,
இளைஞர்கள் தான் இந்த நாட்டை வழிநடத்தக்கூடியவர்கள்.இளைஞர்கள் தான் இந்த நாட்டின் எதிர்காலம்.
தேர்தல் நேரத்தில் எப்போதும் அதிமுக எல்லா கட்சிகளுக்கும் முன் மாதிரியாகவே செயல்பட்டு வருகிறது.
ஜெயலலிதா காலத்திலிருந்தே ஆட்சியின் சாதனைகளை மக்களிடத்தில் எடுத்துச் சொல்லி வருகின்றோம் அதிமுக எதிர்க்கட்சியாக இருந்தாலும் ஆளும் ஆட்சியின் அவலங்களை தேர்தல் நேரத்தில் மக்களிடம் எடுத்துச் சொல்கிறோம்.
தேர்தல் பணியாற்றுவதில் அதிமுக எப்பொழுதுமே முன்னணியில் நின்று கொண்டிருக்கிறது.
கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆலோசனை கூட்டத்தில் யாரும் கலந்து கொள்ளக் கூடாது என அரசு நினைக்கவில்லை.
திடீரென்று கலந்து கொள்ள முடியாது. பரிசோதனை எடுத்துக்கொண்டு மாவட்ட ஆட்சியரை அணுகினால் மக்கள் உறுப்பினர்கள் நிச்சயமாக கலந்து கொள்ளலாம்.
யாரையும் அதிமுக அரசு தவிர்ப்பது கிடையாது.
அதிமுக பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது.
சட்டமன்றத்திலேயே நேருக்கு நேர் எதிர் திமுகவை கொள்கிறோம். ஆனால் அவர்கள் கேள்வி கேட்க தயங்குவார்கள்.
கொரானா தடுப்புப் பணிகள் குறித்து சட்டமன்ற உறுப்பினர்கள் முதல்வரிடம் கூறலாம். கொரானா பரிசோதனை செய்துவிட்டு முதல்வரை நேரடியாக சந்தித்து பேசலாம் என முதல்வர் ஏற்கனவே தெரிவித்து விட்டார்.
இந்தி தெரியாதவர்களை வெளியேறுங்கள் என்று கூறினால் அது தவறானது. அந்தச் சம்பவம் உண்மையாக இருக்கும் பட்சத்தில் முதலமைச்சர் கண்டிப்பான முறையில் நடவடிக்கை எடுப்பார்.
திமுக நடத்தும் பள்ளிகளில் இந்தி கற்றுக் கொடுக்கப்பட மாட்டாது என அறிவிப்பு பலகை வைக்க அவர்கள் தயாராக இருக்கிறார்களா.
பேச்சுக்காக எதையும் திமுக கூறக்கூடாது.
ஆளும் கட்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்பதற்காக எதிர்க்கட்சித் தலைவர் எதையாவது பேசக்கூடாது.
எம்ஜிஆர் ஜெயலலிதா எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரின் சாதனைகளை முதல்வரின் நான்காண்டு சாதனைகளை மக்களிடம் வீடு வீடாகச் சென்று எடுத்துச்சொல்ல இருக்கிறோம்.
தமிழகம் அமைதிப் பூங்காவாக இருக்கிறது. சட்டம் ஒழுங்கு பேணிக்காகக்கப்படுகிறது.
திமுக காலத்தில் போல் தமிழகத்தில் ரவுடிசம் கட்டப்பஞ்சாயத்து மீட்டர் வட்டி கந்து வட்டி, ரிமோட் வெடிகுண்டு போன்ற எந்த பிரச்சனையும் தற்போது இல்லை.
விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவிக்கவில்லை. தேர்தல் நெருங்குவதால் சிறுபான்மை இன மக்களை ஸ்டாலின் ஏமாற்றிக் கொண்டு உள்ளார்.
திராவிட முன்னேற்றக்
கழகம் எல்லாவற்றிலும் நழுவி செல்லக்கூடியவர்கள்.
அதிமுகவை பொறுத்தவரை எம்மதமும் சம்மதம்.
எல்லா மதமும் எங்களுக்கு ஒன்றுதான்.
சாதி மதம் கிடையாது. தேர்தல் நேரத்தில் அதிமுக வேஷம் போட்டதில்லை என கூறினார்.
LatestNews
கண்மாயில் நீர் நிரப்பக் கோரி போராட்டம்…

உசிலம்பட்டி அருகே குடிநீர் ஆதாரமாக உள்ள நான்கு கண்மாய்களில் நீர் நிரப்ப வலியுறுத்தி, கிராம மக்கள் தேர்தலைப் புறக்கணித்து தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்:
மதுரை
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள கோவிலாங்குளம் ஊராட்சிக்குட்பட்ட 18 கிராம மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் கோவிலாங்குளம் பெரிய கண்மாய், ஆண்டிகுளம் கண்மாய் மற்றும் கடுக்காஞ்சி, பெத்தாங்குளம் என்ற நான்கு கண்மாய்களுக்கு திருமங்கலம் பிரதான கால்வாயின் இணைப்பு கால்வாய் மூலம் நீர் நிரப்ப அரசானை பிரபிக்கப்பட்டுள்ள சூழலில் கோவிலாங்குளம் கிராமத்திலிருந்து ஜோதிமாணிக்கம் கிராம அருகே செல்லும் கால்வாய் வரை சுமார் 100 மீட்டர் தூரம் உள்ள ஆக்கிரமிப்பால் கடந்த 40 ஆண்டுகளாக கண்மாய்களுக்கு நீர் வரத்து இல்லாத நிலையே நீடிப்பதாக கூறப்படுகிறது.நீரின்றி வறண்டு காணப்படும் நான்கு கண்மாய்கள் மூலம் சுமார் 500க்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும் நிலையில் இருந்தாலும், இந்த கண்மாய்களை சார்ந்துள்ள 18 கிராம மக்களின் குடிநீர் தேவைக்காவது கண்மாய்களை நிரப்ப பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த வாரம் ஆக்கிரமிப்பை அகற்றும் பணிக்காக வந்த அதிகாரிகள் தேர்தலை காரணம் காட்டி பணிகளை பாதியிலேயே நிறுத்தி விட்டு சென்றதால் ஆத்திரமடைந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கடந்த வாரம் வீடுகளில் கருப்பு கொடி கட்டி போராட்;டத்தில் ஈடுபட்டனர். இதன் பின்பும அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும எடுக்காததால் கோவிலாங்குளம் கிராம மக்கள் கிராமத்தில தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.மேலும் எந்த அரசியல் கட்சியினரும் தங்களது கிராமத்திற்கு ஓட்டு கேட்டு வரக்கூடாது என எச்சரிக்கை விடுக்கும் கிராம மக்கள் விரைவில் நடவடிக்கைகள் எடுக்கவில்லை எனில் ஆதார், ரேசன் கார்டுகளை திரும்ப ஒப்படைக்க உள்ளதாக தெரிவித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்
LatestNews
வாக்குப் பதிவு இயந்திரம் செயல்முறை விளக ்கம்..

வாடிப்பட்டியில்
மின்னனுவாக்குபதிவு
செய்முறைவிளக்கம்.
வாடிப்பட்டி,மார்ச்.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகா தேர்தல்பிரிவு சார்பாக வரும்
சட்டமன்றதேர்தலில் மின்னனுவாக்குபதிவுசெய்யும் முறை பற்றி செய்முறை
விளக்க விழிப்புணர்வு பிரச்சாரம் நடந்தது. இந்த பிரச்சாரத்தை
தேர்தல்அதிகாரி ஜெஸ்டின் ஜெயபால்,உதவிதேர்தல்அதிகாரி தாசில்தார்
பழனிக்குமார் ஆகியோரின் ஆலோசனையின்பேரில் மண்டலதுணைதாசில்தார்
திருநாவுகரசு தலைமை தாங்கி தொடக்கி வைத்தார். வருவாய்ஆய்வாளர்
சஞ்ஜிவீநாதன் முன்னிலை வகித்தார். கிராமநிர்வாகஅலுவலர் கார்த்திக்
வரவேற்றார். கிராமஉதவியாளர்கள் வளர்மதி, ஜெயகுமார், அழகர், சண்முகவேல்,
புஷ்பம் ஆகியோர் கலந்துகொண்டு புதியவாக்காளர்களுக்கு மின்னனுஇயந்திரம்
மூலம் வாக்குபதிவு செய்யும்முறைபற்றி விளக்கிகூறி பயிற்சியளித்து
விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர்.வாங
LatestNews
கொரோனாநிதி அளித்த முதியவர்

மதுரை மாவட்ட ஆட்சியரிடம்,
இதுவரை கொரோனா நிவாரண நிதியாக ரூ. 3 லட்சம் வரை நிதியாக வழங்கிய தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த பூல்பாண்டியன்.