LatestNews
மதுரை வாலிபருக்கு விருது..

வாழ்நாள் சாதனையாளருக்கான ‘தயான் சந்த்’ விருது பெருமை தருகிறது – மாற்று திறனாளி பயிற்சியாளர் ரஞ்சித்குமார்
மத்திய அரசு வழங்கவிருக்கும் வாழ்நாள் சாதனையாளருக்கான ‘தயான் சந்த்’ விருது மிகவும் பெருமை அளிக்கிறது. நிறைய மாற்றுத் திறனாளி விளையாட்டு வீரர்களை உருவாக்குவதற்கு இவ்விருது எனக்கு ஊக்கமளிக்கிறது என்று மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுக்கான பயிற்சியாளர் ரஞ்சித்குமார் பேட்டி.
விளையாட்டு வீரர்களுக்கு பல்வேறு விருதுகளை மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது. மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரராக இருந்து பல்வேறு பதக்கங்களை தேசிய மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளில் வென்றதுடன், பயிற்சியாளராகவும் நூற்றுக்கணக்கான மாற்றுத் திறனாளி வீரர்களையும் உருவாக்கிய பயிற்சியாளர் மதுரையைச் சேர்ந்த ரஞ்சித்குமாருக்கு, மத்திய அரசு வாழ்நாள் சாதனையாளருக்கான தயான் சந்த் விருதை அறிவித்துள்ளது.
இதுகுறித்து ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு அவர் வழங்கிய சிறப்பு நேர்காணலில், ‘மிகக் கடுமையான பாதைகளைக் கடந்து வந்து இந்த சாதனையைப் படைத்திருக்கிறேன் எனும்போது மட்டற்ற மகிழ்ச்சி ஏற்படுகிறது. இந்த விருதுக்கு என்னைத் தேர்வு செய்த மத்திய, மாநில அரசுகளுக்கும், இந்திய பாராலிம்பிக் கமிட்டிக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்திய தேசத்திற்காக 26 முறை உலகளவில் பங்கேற்று குண்டு எறிதல், வட்டு எறிதல் மற்றும் ஈட்டி எறிதல் போன்ற போட்டிகளில் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்றிருக்கிறேன். இதுவரை சர்வதேச அளவில் 22 பதக்கங்களை வென்று இந்தியாவுக்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளேன். அதேபோன்று தேசிய அளவில் 48 தங்கப்பதக்கங்கள் வென்றிருக்கிறேன்.
கடந்த 2014-ஆம் ஆண்டோடு ஓய்வு பெற்றாலும், நான் இதுவரை புரியாத சாதனைகளை என்னுடைய மாணவர்கள் மூலமாக நிறைவேற்றிக் கொண்டது எனக்குப் பெருமையாக உள்ளது. தமிழ்நாடு விளையாட்டு ஆணையத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான தடகளப் பயிற்சியாளராக பொறுப்பேற்று எண்ணற்ற வீரர், வீராங்கனைகளை தேசிய, சர்வதேசிய அளவில் உருவாக்கியுள்ளேன்.
என்னுடைய கடுமையான உழைப்பிற்கு கிடைத்த வெகுமானமாக இந்த விருதைக் கருதுகிறேன். என்னுடைய மாணவர்கள், குடும்பத்தார், நண்பர்கள் அனைவருக்கும் பெருமையளித்துள்ளது. என்னுடைய பயிற்சியாளர் பரசுராம் சார் அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் ஒப்பந்தப் பணியாளராக இருந்தாலும்கூட, இந்தத் துறை என்னை வெகுவாக ஈர்த்துள்ளது. அதற்காகவே குறைந்த ஊதியத்திலும் தொடர்ந்து பணியாற்றி வருகிறேன்.
என்னைப் போன்றே நிறைய மாரியப்பன்கள், ரஞ்சித்குமார்கள் வாய்ப்பில்லாமல் உள்ளனர். அவர்களெல்லாம் அடையாளப்படுத்தப்பட வேண்டும். அவர்களுக்குரிய அங்கீகாரம் கிடைக்க வேண்டும். அதற்கு இந்த விருது மிகவும் பயனளிக்கும் என்று நம்புகிறேன். வாய்ப்பும், வசதிகளும் ஏற்படுத்திக் கொடுத்தால் உலகளவிலான போட்டிகளில் பதக்கங்களை வென்றெடுக்க நிறைய மாற்றுத் திறனாளிகள் தமிழ்நாட்டில் உள்ளனர். வரக்கூடிய பாரா ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு தமிழக வீரர்கள் பெருமை தேடித் தருவார்கள்.
கடந்த 2013-ஆம் ஆண்டு தேசிய அளவில் சிறந்த விளையாட்டு வீரருக்கான விருது அன்றைய குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜியிடமிருந்து பெற்றேன். வருகின்ற ஆகஸ்ட் 29-ஆம் தேதி நடைபெறவுள்ள நிகழ்வில் தற்போதைய குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்திடம் தயான் சந்த் விருதைப் பெறவிருக்கும் தருணம் என் வாழ்வின் முக்கிய தருணமாகும்’ என்கிறார்.
இதுவரை தன்னுடைய பயற்சியின் கீழ் தேசிய அளவில் தகுதிக்குரிய 400 மாணவர்களையும், சர்வதேச அளவில் தகுதிக்குரிய 100 மாணவர்களையும் உருவாக்கியிருப்பதாகப் பகிர்ந்து கொள்ளும் ரஞ்சித்குமார், வருகின்ற பாரா ஒலிம்பிக்கில் சாதனை படைக்கும் 10 தமிழக வீரர்களை உருவாக்கி தமிழகத்திற்கு நிச்சயம் பெருமை தேடித் தர முடியும் என நம்பிக்கையோடு நமக்கு விடை தருகிறார்.
ஈடிவி பாரத் சார்பாக பயிற்சியாளர் ரஞ்சித்குமாருக்கு வாழ்த்துக் கூறி விடைபெற்றோம்.
LatestNews
விழா நடத்த கோரிக்கை

விழா நடத்தக்கோரி இந்து முன்னணியினர் மனு:
மதுரையில் ஆலய திருவிழாவை நடத்தக்கோரி இந்து முன்னணியினர் மாவட்டத் தலைவர் அழகர்சாமி தலைமையில் மதுரை மாவட்ட ஆட்சியர் அன்பழகனிடம் மனு அளித்தனர்.
LatestNews
கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தும் டீக் க டைக்காரர்…

திருப்பரங்குன்றம் அருகே கொரான இரண்டாவது அலைக்காக சோளங்குருணி கிராமத்தில் போராடும் தனி ஒருவர்:
மதுரை
முக கவசம், கப சுரக்குடி நீர் வழங்கி வரும் தன்னார்வலர்
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா சோளங்குருணி கிராமத்தில் வசிப்பவர் ரவிச்சந்திரன் (வயது 54) இவர் டீக்கடை தொழில் நடத்தி வருகிறார்.
தற்போது வேகமாக பரவிவரும் கொரானா தொற்று இரண்டாவது பரவலை தடுக்கும். விதமாக தன்னார்வலராக ரவிச்சந்திரன் கபசுரக் குடிநீர் மற்றும் முக கவசம் வழங்கி பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.
சோளங்குருணி கிராமத்தில் மட்டுமல்லாமல் சுற்றுப்புறங்களில் செல்லும் பேருந்துகளில் ஏறி பொதுமக்கள் அனைவருக்கும் முகக்கவசம் மற்றும் கப சுர குடிநீர் வழங்கி தன்னார்வலராக விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.
ரவிசந்திரன் ஏற்கனவே கடந்த வருடம் கொரான தொடருக்கு தனது மாருதி ஆம்னி வேனில் ஸ்பீக்கர் மைக்செட் மூலம் விழிப்புணர்வு செய்து வழங்கி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்காக திருமங்கலம் காவல் உதவி கண்காணிப்பாளர் (டிஎஸ்பி ) வினோதினியிடம் பாராட்டு சான்றிதழ் , மற்றும் கேடயம் பரிசு பெற்றவர் என்பது பாராட்டுக்குரிய விஷயம்.
LatestNews
12 April, 2021 14:05

*மதுரை சித்திரை திருவிழாவில் பக்தர்கள் அனுமதிக்க கோரி பொதுமக்கள் போராட்டம்.!
மதுரை மீனாட்சியம்மன் கோவில் மற்றும் கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழா ஆண்டுதோறும் வெகுவிமர்சையாக நடைபெறும்,கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக விழாவானது பக்தர்கள் அனுமதியின்றி ஆகமவிதிப்படி நடத்தப்பட்டது, இதனையடுத்து கொரோனா பரவல் குறைந்தநிலையில் கோவில்களில் வழிபட பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இரண்டாம் கட்ட கொரோனா பரவல் அதிகரித்துவருவதால் இந்த ஆண்டு நடைபெறும் மதுரை சித்திரை திருவிழாவினை பக்தர்கள் அனுமதியின்றி நடைபெறும் என அறிவிப்பு வெளியிட்ட நிலையில் அரசின் இந்த முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்தும், சித்திரை திருவிழா எப்போதும் போல பக்தர்கள் அனுமதியோடு நடத்தகோரியும் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மதுரை தமுக்கம் மைதானம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்,இதில் பெண்கள், இளைஞர்கள், சிறுவர்கள் என அனைத்து தரப்பினரும் கலந்துகொண்டு மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பிவருகின்றனர், போராட்டத்தால் ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர், கொட்டும் மழையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் காவல்துறை நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு காரணத்தால் காவல்துறையினர் அனைவரையும் வலுக்கட்டாயமாக கைது செய்ய இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் குண்டுகட்டாக கைது செய்து காவல்துறை வாகனத்தில் ஏற்றிச் சென்றனர்.