பைனான்சியர் வெட்டி கொலை..

பைனான்சியர் வெட்டிக்கொலை….. மதுரை மாவட்டம் தெற்கு வெளி வீதி, சப்பானி கோவில் தெருவை. சேர்ந்த, மணி வயது 54. பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். இவருக்கு தற்போது இரண்டு மனைவியுடன் குடியிருந்து வாழ்ந்து வந்தார் இந்த நிலையில் நேற்று இரவு 8/30 மணி அளவில் பைனான்ஸ் பணத்தை வசூல் செய்து கொண்டு வீட்டுக்கு திரும்ப வதற்காக தெற்கு வெளி வீதி உள்ள ரமண வைத்தியர் தெருவில் மணி வந்து கொண்டு இருந்தார் அவரை வழிமறித்த ஒரு கும்பல் சரமாரியாக வெட்டி அதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார் சம்பவ இடத்திற்கு விரைந்த மதுரை தெற்குவாசல் போலீசார் மற்றும் துணை கமிஷனர் சிவ பிரசாத் ஆகியோர் விசாரணை நடத்தினர் மேலும் கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு அது சிறிது தூரம் ஓடி நின்றது இறந்த மனைவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பிய தெற்கு வாசல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்… காவல்துறையினர் கூறுவது. மணிக்கும் அவரது முதல் மனைவி பிள்ளைகளுக்கும் அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்தது முதல் மனைவியின் மகன் கார்த்திக் அவரது ஆட்களை வைத்து மணியை கொலை செய்திருக்கலாம் என அல்லது தொழில் போட்டி காரணமாக கொலை நடந்திருக்கலாம் என மேலும் இச்சம்பவம் குறித்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகிறோம் என கூறினர் மக்கள் அதிகம் நடமாடும் பகுதியில் கொலை நடந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: