பூமி பூஜை

இராஜபாளையம் அருகே அய்யனார்புரம் கிராமத்தில் பொதுக் கிணறு, அமைக்க பூமி பூஜை நடைபெற்றது

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்க்கு உட்பட்ட அய்யனாபுரம் பகுதியில் 12.06 லட்சம் மதிப்பீட்டில் பொது கிணறு அமைக்க பூமி பூஜை நடைபெற்றது

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒன்றிய பெருந்தலைவர் சிங்கராஜ் பேசுகையில் இந்த பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான தண்ணீர் தேவையை தீர்க்கும் பொருட்டு இந்த பொதுக் கிணறு ரூ.12.06 லட்சம் மதிப்பீட்டில் இன்று ஆரம்பிக்க பட்டது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக கூறினார்

மேலும் இந்த திட்டத்தால் இப்பகுதி மக்களின் அடிப்படை தேவையான தண்ணீர் வசதி பூர்த்தி ஆக வழிசெய்யபட்டுள்ளது

இந்த பகுதியில் உள்ள தெருக்களில் பேவர்பிளாக் பதித்து வாறுகால் வசதி ஏற்படுத்தப்பட்டு, சுகாதார பகுதியாக மாற்ற ரூ 50 லட்சம் மதிப்பீட்டில் திட்ட பணிகள் நடை பெற இருப்பதாக கூறினார்

இந்நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் சிவகுமார் , பொறியாளர் மாலதி, ஒன்றிய கவுன்சிலர்கள் நவமணி உட்பட கழக உறுப்பினர்கள், மற்றும் அப்பகுதி பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: