பலத்த மழை…

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இடி மின்னலுடன் பலத்த மழை பெய்து வருகிறது. மேலும் அரை மணி நேரத்திற்கு மேலாக மின்சாரம் தடைபட்டுள்ளது இதனால் வாடிப்பட்டி பகுதி முழுவதும் இருளில் மூழ்கியுள்ளது.

வாடிப்பட்டியில் கனமழை

வாடிப்பட்டி:

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி, சோழவந்தான், அலங்காநல்லூர் ,பாலமேடு, மற்றும் கொடைரோடு பகுதிகளில் இன்று மாலை 6 மணிக்கு துவங்கி கனமழை பெய்து வருகிறது. இடி மின்னலுடனும். பலத்த காற்றுடனும் கனமழை பெய்து வருவதால் மக்கள் நடமாட்டம் இன்றியும், கடைவீதிகள் வெறிச்சோடியும் காணப்படுகின்றன. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக, சிறிதும் குறைவின்றி இடைவிடாது பெய்து வரும் மழையால் மக்களின் சகஜ வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: