விதை விநாயகர் சிலை விற்பனை

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தோட்டக்கலைத் துறை மூலமாக விதை விநாயகர் விற்பனை

மதுரை

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் தோட்டக்கலைத் துறை சார்பில் மதுரையில் விதை விநாயகர் சிலைகள் விற்பனை செய்யப்படுகின்றன.

களிமண்ணாலான விதையுள்ள இந்த பசுமை விதை விநாயகர் சிலை
அதனைக் கரைக்கப் பயன்படும் தொட்டி மற்றும் செறிவூட்டப்பட்ட தென்னை நார் கழிவுகள் அடங்கிய தொகுப்பு ரூ.150ஃ-க்கு விற்கப்படுகிறது. சென்னையைத் தொடர்ந்து மதுரையிலும் பசுமை விதை விநாயகர் சிலைகள்
அண்ணாநகர் மற்றும் சொக்கிகுளம் உழவர் சந்தைகளில் விற்பனை செய்யப்படுகின்றன. பொதுமக்கள் இந்த விதை விநாயகர் மூலம் விநாயகர் சதுர்த்தி விழாவினை பசுமை வழியில்; கொண்டாடிட மாவட்ட ஆட்சியர்
அறிவித்தார்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: