LatestNews
தொழில் வர்த்தக சங்கத்தின் கலந்தாய்வுக் கூட்டம்

மதுரையை தமிழகத்தின் இரண்டாம் தலைநகரமாக அறிவிக்கக் கோரி தமிழ்நாடு வர்த்தக சங்கம் தென்தமிழகத்தில் உள்ள தொழில் வர்த்தக சங்கத்தினர் கலந்தாய்வு கூட்டம் மதுரை தொழில் வர்த்தக சங்க அரங்கில் நடைபெற்றது,
வருவாய் துறை அமைச்சர்
ஆர் பி உதயகுமார் சிறப்பு விருந்தினராக கலந்தாய்வில் பங்கேற்றார்,
தென்மாவட்டங்களில் இருந்து தொழில் வர்த்தக சங்கத்தினர் நூற்றுக்கணக்கானோர் வருகை தந்தனர்,
பின்பு கலந்தாய்வு கூட்டத்தில் பேசிய அமைச்சர்
ஆர் பி உதயகுமார்,
பொதுவாக கோரிக்கைகள் வைக்கும்போது அமைச்சர்கள் பரிசீலிக்கிறோம் என்று கூறுவது இயல்பு
அதில் ஒட்டுமொத்தமான தீர்வுகளும் உண்டு,
சுக்கு மிளகு இஞ்சி வெள்ளைப்பூண்டு இவை அனைத்தும் நமது சொத்து
இன்று அனைவரது வீட்டில் அசோக் இஞ்சி வெள்ளைப்பூண்டு அனைத்தையும் பழமையை நினைவு படுத்தி உபயோகிக்கிறோம்
மக்களின் உணர்வு மக்களுடைய எதிர்பார்ப்பு மக்களுடைய கோரிக்கை எதிர்பார்ப்பு நம்பிக்கையுடன் வைக்கும் கோரிக்கையை கருத்தில் வைக்க வேண்டும்
இது ஒரு புதிய கோரிக்கை அல்ல 20 ஆண்டு காலங்களாக நிலுவையில் இருக்கிறது கூடிய கோரிக்கை
தகுதி இருக்கா இல்லையா?? சிலர் தகுதி இருக்கு என்று கூறுகின்றனர் சிலர் தகுதியில்லை என்று கூறுகின்றனர், அனைவருக்கும் கருத்தை தெரிவிக்க உரிமை உள்ளது
தொழில் வர்த்தக சங்கத்தினர் ஒரு முடிவு எடுத்தால் அதில் உறுதியாக இருப்பார்கள்,
சென்னை ஒரு தரப்பினருக்கு தலையாக உள்ளது, ஒரு தரப்பினருக்கு மிக நீண்ட தூரத்தில் உள்ளது,..
மதுரை இரண்டாம் தலைநகரம் என்ற விவாதத்தில் பலர் புரிதல் இல்லாமல் பேசுகின்றனர்..
சென்னை இடமில்லாமல் காஞ்சிபுரம் திருவள்ளூர் செங்கல்பட்டு என்று விரிவடைந்து கொண்டே செல்கிறது, தலைநகரம் என்பதால் வேறு வழியில்லாமல் சென்னை விரிவடைந்து செல்கிறது,
நாளை இரண்டாம் தலைநகர் ஆக வேண்டும் என்பது மதுரை மக்களின் கோரிக்கை அல்ல தென் மாவட்ட மக்களின் கோரிக்கை,
இரண்டாம் தலைநகரான மதுரையில் அமைய வேண்டும் என்று இல்லை மதுரைக்கு திருச்சிக்கு நடுவில் கூட வரலாம்..
சிலர் சுயநலமாக எடுக்கும் கோரிக்கையை போன்று இந்த கோரிக்கை அல்ல,
நிர்வாக வசதிக்காக தான் கூடுதல் தலைநகரம் கேட்கிறோம்,
25 துறைகளில் தலைநகராக மதுரை மாறும் போது எத்தனை இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பெற்று பயன் பெறுவார்கள் என்பதை உணர முடிகிறது,
மதுரைக்கு சிறப்பு அந்தஸ்து இருந்தால் தான் தொழில் முதலீட்டை தர முடியும் என்கிறார்கள்..
தூத்துக்குடி துறைமுகத்தை முழுமையாக பயன்படுத்தினால் வளர்ச்சி அபரிமிதமாக இருக்கும்,
கேபினட்டில் நாள் கோரிக்கை வைக்கவில்லை கூறுகின்றார்கள் இடம் எது என்பது முக்கியமில்லை கருத்து முக்கியம் முதலில் நான் சாமானியன் பிறகுதான் சட்டமன்ற உறுப்பினர் அமைச்சர் வாக்காளராக விளையாத கருத்தை தெரிவிக்கிறேன்..
அடுத்த தலைமுறையினர் எங்களைப் பார்த்து கேள்வி கேட்பார்கள்..
எனது கோரிக்கை விவாதப் பொருளாக இருக்கலாம்,ஆனால் நோக்கம் வளர்ச்சி பற்றியது அதைத்தவிர வேறு உள்நோக்கம் இல்லை..
ஒரு நாள் ஒரு வாரம் என்றெல்லாம் இந்த ஆட்சி ஆருடம் கொடுத்தார்கள் இப்போது ஆட்சி நிலைத்து சபாஷ் இல்லை என்ற நிலையை அடைந்திருக்கிறது..
கொடுக்கிற சாமி எங்கு இருக்கிறதோ அங்கு தான் கூட்டம் வரும்,அதனால் தான் எத்தனை நாள் மனதில் இருந்த கோரிக்கையாக வைத்துள்ளது, ஏன் வரத்தைக் கேட்டு இருக்கிறார்கள் என்று கேட்க யாருக்கும் உரிமை இல்லை சாமியாருக்கு வரும் தருகிறதோ அதை அவர்களுக்குக் கிடைக்கும்..
மதுரை இரண்டாம் தலைநகராக வரும்போது மாவட்டங்களில் எண்ணிக்கையில் எல்லை பிரிக்க படுவதில்லை, சென்னைக்கு சேர்த்து தலைநகராக மதுரை இருக்கும் மதுரைக்கு சேர்த்து தலைநகராக சென்னை இருக்கும் நிர்வாகம் மட்டுமே பிரிக்கப்படும்
அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி சட்டசபையில் தான் இதை அறிவிக்க முடியும் என்பது எனக்கும் தெரியும்..
மதுரை-திருச்சி என்பது விவாதம் அல்ல ஆற்றல் சார்ந்த மனித வளம் தென் தமிழகத்தில் தான் உள்ளது..
கோரிக்கையை வைக்கும்போது பல்வேறு சவால்கள் வந்துதான் தீரும், அதைக் கடந்து தான் சாதிக்க வேண்டும்..
பதவியை முன்வைத்த கோரிக்கை அல்ல, பதவியை விட மதுரை வளர்ச்சி தான் முக்கியம்,
கோரிக்கையை வைத்து விட்டு பயந்து ஓட முடியாது, எதற்கும் தயாராகத்தான் இருக்கிறேன்..
வொர்க் பிரம் ஹோம்(work from home) போல work from மதுரை என்றுதான் கோரிக்கை வைக்கிறோம்,,
சென்னையில் இடம் நெருக்கடியில் பணியாற்றாமல் மதுரையில் காற்றோட்டமாக பணியாற்றுங்கள் என்று தான் கோரிக்கை வைக்கிறோம்..
கோரிக்கை வைப்பதை கூட ஏன் வைக்கிறீர்கள் என கேட்கிறார்கள்.
அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் கோரிக்கை வைக்கிறார் என்றால் அது அவருக்கு வாக்களித்த மக்கள் சார்பாக வைக்கும் கோரிக்கை.
அதற்கு அவருக்கு உரிமை உண்டு. இதை வைத்து மதுரைக்கும் திருச்சிக்கும் இடையே தேவையில்லாத பிரச்சனையை உருவாக்க வேண்டாம்..
LatestNews
உறவின்முறை நிர்வாகிகள் தேர்தல்..

மதுரை பந்தல்குடி கிராமம் ஆதி திராவிடர் உறவின்முறை தலைவர் தேர்தல் நடந்தது. பு.பாலகிருஷ்ணன், வா.சொக்கர், அமாரியப்பன், மொ.மாய அழகர், மு.ரவிச்சந்திரன் ஆகியோர் போட்டியிட்டனர். கிராமத்தை சேர்ந்த 1500 பேர் வாக்களித்தனர். தேர்தல் பார்வையாளர் வக்கீல் சரவணன் தலைமையில் தேர்தல் நடந்தது.
LatestNews
பூமிபூஜை

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி முடுக்கங்குளம் ஊராட்சியில் சுத்தகரிக்கப்பட்ட குடிநீர் திட்டம் அமைப்பதற்கான பூமி பூஜை ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி முத்துச்சாமி தலைமையில் நடைபெற்றது.
LatestNews
ராணுவ வீரர் உடலுக்கு மரியாதை
26- 2 – 21
இந்திய திபேத் எல்லை பாதுகாப்பு படையில் பணியாற்றும் மதுரை இராணுவ வீரரின் உடலுக்கு துணை இராணுவத்தினர் 39 குண்டுகள் முழங்க அஞ்சலி:
கிராமமே சோகத்தில் மூழ்கியது, கடைகள் முழுவதும் அடைப்பு.:
மதுரை
மதுரை கிழக்கு தாலுகாவில் உள்ள பொய்கைகரைப்பட்டியினைச் சேர்ந்த பாலச்சாமி இந்திய திபேத் எல்லை பாதுகாப்பு படையில் கடந்த 14 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்காக சொந்த ஊர் வந்து கடந்த பிப்ரவரி 3ந் தேதி மீண்டும் பணிக்கு திரும்பியுள்ளார். இந்நிலையில் கடந்த 24 ந் தேதி மாலையில் சத்திஸ்கர் மாநிலத்தில் நக்ஸல்கள் பதுக்கி வைத்திருந்த கண்ணி வெடிகளில் சிக்கி எதிர்பாராவிதமாக உயிரழந்துள்ளார். அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உடல் பெங்களுரில் இருந்து துணை இராணுவ வாகனம் மூலம் தரை மார்க்கமாக சொந்த ஊரான பொய்கை கரைப்பட்டி கிராமத்திற்கு இன்று துணை இராணுவ வீரர்கள் கொண்டு வந்தனர். பின்னர் உறவினர்களிடம் பிரேத உடல் ஒப்படைக்கப்பட்டது. பிரேத உடலை பார்த்தவுடன் உறவினர்கள் கிராம மக்கள் அனைவரும் கதறி அழுதனர்.
மாவட்ட ஆட்சியர் அன்பழகன் பிரேத உடலுக்கு மலர் அஞ்சலி செய்து விட்டு பால்ச்சாமியின் மனைவி ராமலெட்சுமியிடம் ரூ 20 லட்சத்திற்க்கான காசோலையை வழங்கி ஆறுதல் கூறினார். அதனைத் தொடர்ந்து பிரேத உடலுக்கு துணை ராணுவத்தினர் கமாண்டர் பானு பிர தாப் சிங், துணை கமாண்டர் ராஜேஸ் மீனா ஆகியோர் தலைமையில் அஞ்சலி செய்தனர் பின்னர் அவரது உடலை துணை இராணுவத்தினர் மற்றும் கிராம பொது மக்கள் மயானத்திற்க்கு சுமந்தே கொண்டு சென்றனர். அங்கு துணை இராணுவத்தினர் பிரேத உடலை சவப்பெட்டியிலிருந்து மயானத்தில் வைத்தனர். அதன் பின்னர் மூவர்ண தேசியக் கொடியினை போர்த்தினர். துணை ராணுவத்தினர் 13 பேர் வரிசையில் நின்று, 3 தடவை 39 குண்டுகள் வானை நோக்கி சுட்டனர். பிரேத உடலில் போர்த்தப்பட்ட கொடி அவரது தந்தையிடம் கமாண்டர் வழங்கினார். அதன் பின்னர் பிரேத உடல் எரியூட்டப்பட்டது.
இறந்தவருக்கு ராமலட்சும் என்ற மனைவியும் அவருக்கு நிதிக்ஸா என்ற இரன்று வயது பெண் குழந்தையும் உள்ளது. இறப்பை முன்னிட்டு பொய்கை கரைப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தது. கிராமங்களே சோகத்தில் மூழ்கின.