டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

இராஜபாளையத்தில் டாஸ்மாக் அனைத்து சங்க கூட்டமைப்பு சார்பில் 14 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி தொடர் முழக்க ஆர்ப்பாட்டம்

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் டி.பி மில்ஸ் சாலையில் உள்ள டாஸ்மாக் கடையின் முன்பு டாஸ்மாக் ஊழியர்கள் அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

ஆர்பாட்டத்தில் டாஸ்மாக் பணியாளர்களுக்கு கோவிட் – 19 நோய்த் தொற்று அரசாணை 280 அமல்படுத்த வேண்டும்

கோவிட் – 19 நோய்த்தொற்று காரணமாக உயிரிழந்த பணியாளர்களுக்கு 50 லட்சம் இழப்பீடு வழங்கும் காப்பீட்டு திட்டத்தை அமல்படுத்தவும், அவரது வாரிசுதாரர்களுக்கு வேலை வழங்க வேண்டும்

டாஸ்மாக் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்

கேரளா மதுக்கடை நிர்வாக முறையை டாஸ்மாக்-ல் அமல்படுத்த வேண்டும்

உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநில அரசுக்கு எதிராக தொடர் முழுக்க ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்

ஆர்ப்பாட்டத்தில் அனைத்து சங்க கூட்டமைப்பு சார்பில் டாஸ்மாக் பணியாளர்கள் கலந்துகொண்டு கண்டன கோஷமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: