வாடிப்பட்டியில் ராஜிவ்காந்தி பிறந்த தின ம்..

ராஜுவ்காந்தி பிறந்தநாள்விழா.

வாடிப்பட்டி ஆக.21.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி நகர,வட்டார இ.காங்கிரஸ் சார்பாக ராஜுவ்
காந்தி பிறந்தநாள்விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவிற்கு மாவட்டத்
துணைத்தலைவர் எஸ்.எஸ்.குருசாமி தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச்செயலாளர்
ஜெகதீசன், மனிதஉரிமைதொகுதிதலைவர் மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இளைஞர்காங்கிரஸ்தொகுதிதலைவர் மணிவண்ணன் வரவேற்றார். இதில்
கட்சிநிர்வாகிகள் அழகன், முத்து, ரமேஷ், குருவன், சுந்தரபாண்டி உள்பட
பலர்கலந்துகொண்டனர். முடிவில் பழனிச்சாமி நன்றிகூறினார். தேனூரில்
நடந்த
நிகழ்ச்சிக்கு, கிராமகமிட்டி
த்தலைவர் நாகேந்திரன் தலைமை தாங்கினார்.
வட்டாரதுணைத்தலைவர் கணேசன், பொன்னுச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வட்டாரதலைவர் செந்தில்குமார் மாலை அணிவித்து இனிப்பு வழங்கினார். இதில்
பவுன்ராஜ், ஊர்காவலன், தி;னேஷ் உள்பட பலர்கலந்துகொண்டனர். முடிவில்
முத்துப்பிள்ளை நன்றிகூறினார்.

விடுதலைபோராட்டவீரர்
ஒண்டிவீரன்நினைவுநாள்.

வாடிப்பட்டி ஆக. 21.

மதுரை வடக்கு புறநகர்மாவட்டம் வாடிப்பட்டி ஒன்றிய ஆதித்தமிழர்பேரவை
சார்பாக விடுதலைபோராட்டவீரர் ஒண்டிவீரன் நினைவுநாள் ஆண்டிபட்டி
இந்திராகாலணியில் அனுசரிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்டச் செயலாளர்
சரவணன் தலைமை தாங்கினார். மாவட்டத் துணைத் தலைவர் அய்யப்பன், இளைஞரணி
ஒன்றிய செயலாளர் இனியவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஒன்றிய
துணைச் செயலாளர் மணிமாறன்;, தொழிலாளர்பேரவை ஒன்றிய துணைச்செயலாளர் சரவணன்
உள்பட பலர்கலந்துகொண்டனர். முடிவில் ஒன்றியதுணைத் தலைவர் கண்ணன் நன்றி
கூறினார். மேலும் ,தாதம்பட்டி, பொட்டுலுப்பட்டி, கச்சைகட்டி,
விராலிப்பட்டி, திருவாலவாயநல்;லுhர், வைத்தியநாதபுரம், பூச்சம்பட்டி
கிளைகளிலும் ஒண்டிவீரன் படத்திற்கு மாலை அணிவித்து வீரவணக்கம்
செலுத்தப்பட்டது..

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: