ஜி.கே. மூப்பனார் பிறந்தநாள் விழா..

ஜி.கே.மூப்பனார்
பிறந்தநாள்விழா

வாடிப்பட்டி ஆக 20.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி வட்டார தமிழ்மாநிலகாங்கிரஸ்கட்சி சார்பாக
ஜி.கே.மூப்பனார் பிறந்தநாள்விழா சண்முகம் திடலில் நடந்தது. இந்த
விழாவிற்கு வட்டாரத்தலைவர் பாலசரவணன் தலைமைதாங்கினார். மாவட்ட துணைத்
தலைவர்கள் கராத்தேசிவா, கச்சைகட்டிபாண்டி, சரந்தாங்கி பாலுஆகியோர்
முன்னிலை வகித்தனர். வட்டாரதுணைத்தலைவர் முத்து செல்வம் வரவேற்றார்.
இந்தநிகழ்ச்சியில் மாவட்டத்தலைவர் ஏ.ஆர்.தனுஷ் கோடி மூப்பனார் படத்திற்கு
மாலைஅணிவித்து கொடியேற்றினார். மாநில இணை செயலாளர் ஒத்தக்கடை
கே.ஜெயபிரகாஷ் இனிப்பு மற்றும் முககவசம் வழங்கினார். இதில்
இந்துமுன்னணிமாவட்டதுணைத்தலைவர் மரக்கடை பொன்னையா, அலங்கைவட்டாரத்தலைவர்
கார்த்திக், ராஜேந்திரன், அர்சுனன், முத்துபாண்டி, முருகவேல் உள்படபட
பலர்கலந்துகொண்டனர். முடிவில் எஸ்.சி.பிரிவு மாவட்டத்தலைவர்
முத்துகாமாட்சி நன்றிகூறினார்.

சோழவந்தான்
ரயில்வே மேம்பாலகட்டுமானபணியினை
விரைவாக முடிக்கவேண்டும்.
மறத்தமிழர்சேனை வலியுறுத்தல்.
வாடிப்பட்டி ஆக
மதுரை புறநகர் மாவட்டம் மறத்தமிழர்சேனை நிர்வாகிகள் கூட்டம் வாடிப்பட்டி
யில் நடந்தது. இந்த கூட்டத்திற்கு மாவட்டசெயலாளர் அரியூர் முத்துக்குமார்
தலைமை தாங்கினாh;. மாவட்டதலைவர் லோகு, மாவட்ட பொருளாளர் கோட்டூர்சாமி
ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் லோ கேஸ்வரன் வரவேற்றார்.
இந்தகூட்டத்தில் மாநில துணைப் பொது செயலாளர் ஆதிமுத்துக்குமார்,
இளைஞரணிமாவட்டசெயலாளர் கோபிநாத், பாண்டி, கண்ணன் உள்பட
பலர்கலந்துகொண்டனர். இந்தகூட்டத்தில் மதுரையை இரண்டாவது தலைநகராக
அறிவிக்ககோரியும், சோழவந்தான் தொகுதியில் கலைகல்லுhரி
அமைக்ககோரியும்,தொகுதிவரைமுறையில் பொதுதொகுதியாக அறிவிக்க கோரியும்,
மேட்டுநீரேத்தான்பிரிவு முதல் கட்டக்குளம் பிரிவு வரை கிடப்பில்
போடப்பட்ட சாலைப்பணியை உடனே தொடங்ககோரியும், சோழவந்தான்
ரயில்வேமேம்பாலபணியை கோரோனாஊரடங்குமுடிவதற்குள் முடிக்க கோரியும்,
ஊரடங்கில் பாதிக்கப்பட்ட அனைத்து தொழிலாளர் களுக்கும் ரூ.5ஆயிரம்
நிவாரணஉதவிவழங்ககோரியும், இ பாஸ்முறையை அடியோடு ரத்துசெய்யகோரியும்,
ஊரடங்கு காலத்தில் ஒத்திவைக்கப்பட்ட விவசாய, வணிக, வாகனக்கடன்களின்
தவணைக்கான வட்டியை ரத்துசெய்ய கோரியும், பாதியில்
நிறுத்திவைக்கப்பட்டுள்ள வாடிப்பட்டிபஸ்நிலையபணியை உடனே தொடங்ககோரியும்
தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. முடிவில் கணேசன் நன்றிகூறினார்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: