மதுரையில் ரவுடி கொலை…

*மதுரையில் பிரபல ரவுடி சரமாரி குத்திக் கொலை கொலை போலீஸ் விசாரணை*

மதுரை அண்ணாநகர் வைகை காலனி பகுதியை சேர்ந்தவர் செந்தூர் பாண்டியன் மகன் ஆனந்த்.

இவர் இன்று மாலை மதுரை வண்டியூர் பழனி ஆறுமுகா தியேட்டர் பின்புறம் ஒரு முட்புதரில் நண்பர்களுடன் மது அருந்தியுள்ளார்.

அப்போது ஏற்பட்ட தகராறில் அவரை சரமாரியாக குத்தியும் கல்லை தூக்கி தலையில் போட்டும் கொலை செய்து விட்டு கும்பல் தப்பியது.

கொலையான இடத்திற்கு சிறிது தூரத்தில் கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்களும் கண்டெடுக்கப்பட்டன.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அண்ணாநகர் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர் மேலும் கொலை நடந்த இடத்தில் தடயவியல் நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர்.

கொலையான ஆனந்த் சகஆட்டோ ஓட்டுநர்களிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார் அதனால் முன் விரோதம் காரணமாக கொலை நடந்திருக்கலாம் என போலீசாரின் முதற் கட்ட விசாரனையில் தெரியவந்துள்ளது

இவர் மீது மதுரை எழில் நகர் பகுதியில்
50 ரூபாய்க்காக வாட்ச்மேனை குத்திக் கொலை செய்யப்பட்ட வழக்கு உள்ளிட்ட பல்வேறு கொலை கொள்ளை வழக்குகள் உள்ளது.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: