நமது விமானப்படையின் சாகசம்

#செம்மை_மாதர்
…..
ஒரு விமானம் அதாவது …அது பயணிகள் விமானம் / போர் விமானம் / சிங்கிள் சீட்டர் எனப்படும் சிறிய ரக விமானம் / கார்கோ பிளேன் எனப்படும் சரக்கு விமானம் / ட்ரோன் எனப்படும் ஆளில்லா விமானம் இப்படி எவ்வித எந்த விமானமாக இருந்தாலும் சரி அவை பாதுகாப்புடன் பறந்தது பத்திரமாக தரையிறங்கிட கிரவுண்ட் கண்ட்ரோல் என பொதுவாக கூறப்படும் தரை கட்டுப்பாட்டு கேந்திர ஆசாமிகளின் பங்கு இன்றியமைத்தாது.(M)
……
ரேடார் மற்றும் பல மின்னியல் கருவிகள் துணைக்கொண்டு பணி புரியும் இந்த தரை கட்டுப்பாட்டு ஆசாமிகளில் சிவிலியன் விமானங்களின் பறத்தலை கட்டுப்படுத்துவோரை ATC எனப்படும் ஏர் ட்ராஃபிக் கன்ட்ரோலர் என குறிப்பிடுவர். விமானப்படை மற்றும் மிலிட்டரி விமானங்களின் பறத்தலை தரையிலிருந்து கட்டுப்படுத்துவோரை ஃபிளைட் கன்ட்ரோலர் என்பார்கள் (u)
…….
சென்ற 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 26 ஆம் தேதியன்று பாகிஸ்தானின் கைபர் பக்துன்வா பகுதியில் பதுங்கியிருந்த ஜெய்ஷ் இ முஹமது இயக்க பயங்கரவியாதிகள் முகாமினை நோக்கி இந்திய விமானப்படையின் ஆறு மிராஜ் 2000 விமானங்கள் குண்டு வீசி குத்து டான்ஸ் போட்டது இங்கே பலருக்கும் நினைவிருக்கலாம். (r)
…….
மறுநாள் அதாவது 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 27 ஆம் தேதியன்று வீராவேசமாக பாகிஸ்தான் விமானப்படையின் 24 விமானங்களைக்கொண்ட ஒரு பெரும் விமானப்படை தொகுப்பு இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற போது ..அதை எதிர்பார்த்து காத்திருந்த இந்திய விமானப்படை விமானங்கள் அவற்றை விரட்டியடித்தன.(a)
……
இந்த சண்டையில் தான் இந்திய விமானப்படையின் அபிநந்தன் வர்த்தமான் ஒரு புராதன மிக் 21 விமானத்தில் பறந்து பாகிஸ்தானின் அதிநவீன எஃப் 16 விமானத்தை சுட்டு வீழ்த்தி சாதனை புரிந்தார் .(l)
……
இதில் விமானத்தில் பறந்த விமானப்படை விமானிகளின் திறமையும் தீரமும் ஒரு புறம் இருக்க தரை கட்டுப்பாட்டு ஆசாமிகளின் ரேடார் கண்காணிப்பு மற்றும் இதர எலக்ட்ரானிக் கவுன்டர் மெஷர் சமாச்சாரங்கள் சமயோசிதமான / அதி புத்திசாலித்தனமான முடிவுகள் / கைடன்ஸ் எனப்படும் வழிகாட்டல்களின் பங்கு மிகவும் முக்கியமானது. (i)
……
அதாவது பிப்ரவரி 26 அன்று நடந்த பாலாகோட் ரெய்டின் போதும் சரி அல்லது அடுத்த நாள் நடந்த அபிநந்தன் வர்த்தமானின் தீரமான சண்டையின் போதும் சரி தரை கட்டுப்பட்டு ஃபிளைட் கன்ட்ரோலர் பணியில் இருந்தது Squadron Leader Minty Agarwal ஸ்குவாட்ரன் லீடர் மின்டி அகர்வால் என்ற (பெண்) ஆஃபீஸர். (d)
……
விங் கமாண்டர் அபிநந்தன் வர்த்தமான் விண்ணில் பறக்கத்துவங்கிய கணத்திலிருந்து அவருக்கு மிக துல்லியமான விபரங்களையும் வழிகாட்டுதலையும் அளித்தது ஸ்குவாட்ரன் லீடர் மின்டி அகர்வால். அபிநந்தன் விமானத்தை எந்த கோணத்திலிருந்து எவ்வகையான விமானங்கள் எந்த வேகத்தில் தாக்க வருகின்றன ,,, அபிநந்தன் பதிலுக்கு என்ன செய்யவேண்டும் .. எவ்விதமான கவுன்டர் மெஷர் எடுக்கவேண்டும் என கூறியதும் ஸ்குவாட்ரன் லீடர் மின்டி அகர்வால் தான். (h)
……
அபிநந்தன் விமானம் தாக்கப்பட போகும் தருணத்தையும் முன்னரே உணர்ந்து அபிநந்தனை திரும்பி வருமாறு மின்டி அகர்வால் பிறப்பித்த உத்தரவு பாகிஸ்தானின் அதி நவீன ECM ஜாமர்களால் தடுக்கப்பட்ட காரணத்தாலேயே அவரது புராதன விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டு அவர் போர் கைதியாக பிடிபட்டு பின்னர் அடுத்த நாளே விடுவிக்கப்பட்டார். (a)
……..
ஸ்குவாட்ரன் லீடர் மின்டி அகர்வாலின் (போர் நேர) அரும்பணிக்காக அவருக்கு இந்திய அரசின் மிக உயரிய விருதான யுத் சேவா மெடல் வழங்கப்பட்டது. இவர் இந்த உயரிய விருதினை (இந்திய பாதுகாப்பு படைகளின் அனைத்து பிரிவுகளிலிருந்தும் அதாவது ஆர்மி / நேவி / ஏர்ஃபோர்ஸ் அனைத்தையும் சேர்த்து) பெரும் முதல் பெண்மணி ஆவார். (r)
……
விங் கமாண்டர் அபிநந்தன் ஒரு பாகிஸ்தானிய அதிநவீன எஃப் 16 விமானத்தை சுட்டு வீழ்த்தியதை ரேடாரில் முதன் முதலாக கண்டதும் மின்டி அகர்வால் தான். (b)
……
அந்த நிகழ்வின் போது உங்கள் மனநிலை எப்படியிருந்தது என்று பின்னர் அவரிடம் கேட்ட போது நான் இந்தியன் ஏர் ஃபோர்ஸில் சேர்ந்ததன் முழுப்பலனையும் அந்த ஒரு கணத்தில் அனுபவித்துவிட்டேன் என்று கூறினார்.(a)
…….
என் இனிய தமிழ் மக்களே…. உங்களில் (யாருக்காவது) பள்ளி மற்றும் கல்லூரியில் படிக்கும் பெண் குழந்தைகள் இருந்தால் அவர்களுக்கு ஒரு ரோல் மாடலாக நீங்கள் காட்ட வேண்டியது ஸ்குவாட்ரன் லீடர் மின்டி அகர்வால் போன்றோரைத் தான் என்று கூறிக்கொண்டு…..(b)
……..
பின்குறிப்பு : (u) மீண்டும் கூறுகிறேன் …..என் இனிய தமிழ் மக்களே…உங்களுக்கெல்லாம் எப்படியோ தெரியாது. எனக்கு ஸ்குவாட்ரன் லீடர் மின்டி அகர்வால் போன்றோர் தான் உண்மையான ஹீரோக்கள்….டாட்
……..
கொசுறு : இப்பதிவில் என் நட்பு பட்டியலில் இருக்கும் பெண்பாற் மக்களை (மட்டுமே) tag செய்திருக்க காரணம் அவர்கள் (தவறாமல்) ஸ்குவாட்ரன் லீடர் மின்டி அகர்வால் பற்றி அறிந்துக்கொள்ள வேண்டுமென்று பாமரன் நான் விரும்பியதால் தான்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: