வணிகர்கள் சங்க பேரவைக் கூட்டம்

பொது போக்குவரத்தை தொடங்க வணிகர்கள் சங்கங்களின் பேரவை கூட்டத்தில் தீர்மானம்:

மதுரை

மதுரை மாவட்டத்தில் பொது போக்குவரத்தை உடனே தொடங்க வேண்டும், வியாபார நேரத்தை இரவு 10 மணி வரை நீட்டிக்க வேண்டும், மதுரை மாவட்டத்தில் உள்ள திருமண மண்டபங்களை உடனடியாக திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், வியாபாரிகளுக்கு விதிக்கப்படும் தொழில் வரியை இந்த ஆண்டு ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் வலியுறுத்தப்பட்டன.
மதுரையில் புதன்கிழமை நடைபெற்ற வணிகர்கள் சங்கங்களின் பேரவை கூட்டத்துக்கு, மாவட்டத் தலைவர் கே. ராஜபாண்டியன் தலைமை வகித்தார். மாநில இணைச் செயலாளர் பி. டேனியல் தங்கராஜ் சிறப்புரையாற்றினார்.
மாவட்ட செயலர் மயில் மூலப் பொருள், பொருளாளர் பொன் சங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: