ஆட்டோ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

ஆட்டோ தொழிலாளர்களுக்கு ரூ.7,500 நிவாரணம் கோரி
சிஐடியு ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை, ஆக.20-, ஆட்டோ தொழிலாளர்களுக்கு கொரோனா கால ஊரடங்கு நிவாரணமாக ரூ.7,500 வழங்க வலியுறுத்தி சிஐடியு சார்பில் புதுக்கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு புதுக்கோட்டை மாவட்ட ஆட்டோ தொழிலாளர் சங்கத் (சிஐடியு) தலைவர் கே.முகமதலிஜின்னா தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி சிஐடியு மாவட்ட செயலாளர் ஏ.ஸ்ரீதர், ஆட்டோ சங்க மாவட்ட செயலாளர் சீனிவாசன் மற்றும் நிர்வாகிகள் அய்யப்பன், குமார் உள்ளிட்டோர் பேசினர். 50-க்கும் மேற்பட்ட ஆட்டோ தொழிலாளர்கள் பங்கேற்றனர்.

கொரோனா காலத்தில் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் ஆட்டோ தொழிலாளர் குடும்பத்திற்கு மாதம் ரூபாய் 7500 வழங்க வேண்டும்., எஃப்சி, பர்மிட், இன்சூரன்ஸ்; முடிவடைந்த நாளில் இருந்து ஓராண்டுக்கு காலநீட்டிப்பு செய்ய வேண்டும். வங்கி மற்றும் தனியார் நிதி நிறுவனங்களில் வாங்கிய வாகனக் கடன்களுக்கு தவனைக்கால அவகாசம் வழங்க வேண்டும். அபராத வட்டி போடக்கூடாது. நலவாரியங்களில் ஆன்லைன் பதிவை முறைப்படுத்த வேண்டும். பெட்ரோல் டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட முழக்கங்கள் ஆர்ப்பாட்டத்தில் எழுப்பப்பட்டது.

செய்தி: தனபால்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: