LatestNews
வயல்களில் வெட்டுக்கிளி தாக்கம்…கட்டுப் படுத்த வேளாண் அதிகாரிகளுக்கு உத்தரவு…

உசிலம்பட்டி அருகே பயிர்களில் வெட்டுக்கிளி தாக்கம்: அமைச்சர் ஆய்வு
கட்டுப்படுத்த வேளாண்துறை அதிகாரிகளுக்கு கட்டளை:
மதுரை
உசிலம்பட்டி வட்டம்
புத்தூர் கிராமத்தில் மாட்டுத் தீவணத்திற்காக விதைக்கப்பட்டிருந்த பயிர்களை வெட்டுக்கிளிகள் தாக்கியதை மாண்புமிகு வருவாய் பேரிடர் மேலாண்மை
மற்றும் தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் திரு.உதயகுமார்
பார்வையிட்டார்.
தெரிவிக்கையில்:-
புத்தூர் கிராமத்தில் அரை ஏக்கர் நிலத்தில் மாட்டுத் தீவணத்திற்காக விதைக்கப்பட்டிருந்த பயிர்களில் வெட்டுக்கிளிகள் தாக்குதலை தடுக்கும் வகையில் மாவட்ட ஆட்சித்தலைவர்
வழிகாட்டுதலோடு ,வேளாண்மைத்துறை அதிகாரிகள் விவசாயிகளுக்கு தக்க அறிவுரைகளை வழங்கி
வெட்டுக்கிளிகளுடைய நிலையை அறிந்து மருந்து தெளிக்க வேண்டுமென அறிவுறுத்தியுள்ளனர். விவசாயிகள் இப்பயிரை மாட்டுத்தீவனத்திற்கு பயன்படுத்த வேண்டுமென்பதால் வேப்பெண்ணெய்யை மருந்தாக பயன்படுத்தியுள்ளனர்.
மாவட்ட ஆட்சித்தலைவர்
வேண்டுகோளினை ஏற்று வேளாண்மை கல்லூரி ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் இவை நாட்டு வெட்டுக்கிளிகள் என்றும்
இவற்றுடைய வளர்ச்சியையும்ää பரவலையும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துவிட முடியும் என்றும் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு முதலமைச்சர்
அறிவுரையின்படியும்,
துணை முதலமைச்சர்
அறிவுரையின்படியும்
நாடாளுமன்ற உறுப்பினர் ,
சட்டமன்ற உறுப்பினர்
காவல்துறை அதிகாரிகளும் இப்பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள்.
வெட்டுக்கிளி பரவலை தடுப்பதற்கான நடவடிக்கைகளை உடனே மேற்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர்
வேளாண்மைத்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்கள். மருந்து தெளிப்பது மற்றும் பாதிக்கப்பட்ட பயிர்களைச் சுற்றி வலையை பயன்படுத்திப பிற பகுதிகளுக்கு பரவாமலிருக்க செய்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
மூன்று மாதங்களுக்கு முன்பாக ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து வெட்டுக்கிளிகள் பரவியபோதும் நமது அதிகாரிகள் எல்லையோர மாவட்டங்களில் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டனர்.
தற்போது இங்குள்ள வெட்டுக்கிளிகள் வயல் வரப்புகளில் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்யும் நாட்டு வெட்டுக்கிளிகள் எனவே இதனால் பாதிப்பு ஏற்படவாய்ப்பில்லை
அவற்றுக்குறிய உணவு பற்றாக்குறையினால் இப்பயிர்களை தாக்கியுள்ளது என்றும் வேளாண்மைத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
எனினும் ,தொடர் கண்காணிப்பில் ஈடுபட அவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே , ,பொதுமக்கள் இது குறித்து அச்சப்பட வேண்டியதில்லை. விவசாயிகளுடைய கோரிக்கையை ஏற்று மாண்புமிகு அம்மாவின் அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் , மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.டி.ஜி.வினய்
உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர்
பி.நீதிபதி,
வேளாண்மைத்துறை இணை இயக்குநர்
.விவேகானந்தன்
உசிலம்பட்டி வருவாய் கோட்டாட்சியர்
ராஜ்குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
LatestNews
கிராம மக்கள் முற்றுகை போராட்டம்..

ஆட்சியர் அலுவலக முன்பு முற்றுகை போராட்டம்:
மதுரை
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட
கொம்பாரி கிராம ஊராட்சியில் உள்ள கீழக் கண்மாய் மற்றும் மேலக் கண்மாய்களுக்கு நிலையூர் – கம்பிகுடி கால்வாயிலிருந்து தொட்டியபட்டி பிரிவிலுள்ள நெடுமதுரை கடல் வழியாக மேற்சொன்ன கண்மாய்களுக்கு தண்ணீர் திறக்க ஆவணம் செய்யும்படி வேண்டுகோள் விடுத்தும் , தண்ணீர் திறந்து விடக் கோரி மாவட்ட நிர்வாகத்திற்கு பரிந்துரை செய்த திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ஆசிக்கை காத்திருப்போர் பட்டியலில் வைத்திருப்பதாக கூறப்படுகிறது.
எனவே அவரை மீண்டும் பணியிலமர்த்தக் கோரியும் கொம்பாரி
ஊராட்சி மன்ற தலைவர் தலைமையில்
கொம்பாரி ஊர் பொதுமக்கள் சுமார் 450 பேர் தங்களது குடும்ப அட்டையை மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைப்பதாக கூறி
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு முற்றுக்கை போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.கி
LatestNews
திடீரென வீடு இடிந்து விழுந்தது…

மதுரை தெற்கு வாசல் மீனாட்சி டாக்கீஸ் அருகே வீடு ஒன்று திடீரென இடிந்தது.
தகவல் கிடைத்ததும், மதுரை தீயணைப்பு துறையினர் விரைந்துள்ளனர்.
LatestNews
ஜெயலலிதா கோயில் கும்பாபிஷேகம்..

ஜெ.கோயில் கும்பாபிசேகத்திற்கு கிராமம் கிராமாக அமைச்சர் உதயகுமார் அழைப்பு
திருமங்கலம் :
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே டி. குன்னத்தூரில்ஜெ.பேரவை சார்பில் அமைச்சர் உதயகுமார் ஏற்பாட்டில் அம்மா கோயில் என்ற பெயரில் அ.தி.மு.க. நிறுவனர் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெ.க்கு கோயில் கட்டப்படுகிறது. இதில் இருவருக்கும் 8 அடி உயர வெண்கல சிலை அமைக்கப்பட்டுள்ளது. கோயிலுக்கான பணிகள் மும்முரமாக நடந்து வரும் நிலையில், ஜன.30 ல் கும்பாபிசேகம் நடக்க உள்ளது.
இந்த கும்பாபிசேகத்திற்கு முதல்வர் பழனிச்சாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் உட்பட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொள்ள உள்ளனர்.
இந்த நிகழ்ச்சிக்காக திருமங்கலம் தொகுதியில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் அமைச்சர் உதயகுமார் நேரில் சென்று கும்பாபிசேகத்தில் கலந்து கொள்ள பொதுமக்களுக்கு அழைப்பிதழ் கொடுத்தார்.