பெரியாறு வாய்க்காலிருந்து சாத்தியாறு அண ைக்கு தண்ணீர்..

சாத்தியார் அணைக்கு நீர் கொண்டுவர மத்திய மாநில அரசுகளுக்கு விவசாயிகள் கோரிக்கை விரைவில் முதல்வரை சந்தித்து முறையிட முடிவு:

அலங்காநல்லூர் ஆக19

பாலமேடு அருகே சாத்தியார் அணைக்கு வைகை அணை நீரை கொண்டுவந்து நிரப்ப விவசாயிகள் மத்திய மாநில அரசுகளுக்கு கோரிக்கை. விரைவில் தமிழக முதல்வரை சந்தித்து முறையிட முடிவு செய்துள்ளனர் மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள சாத்தையாறு அணை . சுமார் 29 ஏக்கர் பரப்பளவு கொண்டது . போதிய நீர் வரத்து இல்லாமல் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக வறண்டு கிடக்கிறது. இந்நிலையில் இதன் மூலம் பாசன வசதி பெறும் சுமார் பத்து கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் முக்கிய நபர்கள் உள்ளிட்ட பலர் இன்று காலை திடீரென சாத்தியார் அணையில் ஒன்றுகூடினர். தொடர்ந்து வறண்டு கிடக்கும் சாத்தையாறு அணைக்கு
அணைப்பட்டி பேரனை அணையிலிருந்ததோ, வைகை அணையிலிருந்தோ தண்ணீர் கொண்டுவந்து நிரப்பி விவசாய நிலங்கள் பாசனவசதி பெற துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய மாநில அரசுகளுக்கு கோரிக்கை வைத்தனர். இது சம்பந்தமாக விரைவில் விவசாயிகள் குழுவாக சென்று முதல்வரை சந்தித்தும்.மத்திய வேளாண் அமைச்சரை சந்தித்தும் பாரதப் பிரதமரை சந்தித்தும் இதற்காக நிதி ஒதுக்கியும் விரைவில் நடவடிக்கை எடுக்க கோரியும் முறையிட முடிவு செய்துள்ளனர். பாஜக விவசாயப் பிரிவு மாநில துணைதலைவர் முத்துராமன்
இதில் கலந்துகொண்டு விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று மாநிலத் தலைவர் முருகன் மூலம் முதல்வர் மற்றும் மத்திய வேளாண் அமைச்சர் பாரத பிரதமர் அவர்களை சந்திக்க உள்ளதாக கூறினார்.
முன்னதாக , ஒன்பது கண்மாய் விவசாயிகள், கீழச்சின்னம்பட்டி ஊராட்சித் தலைவர் ரமேஷன் செல்வராஜ், அய்யூர் அப்பாஸ், இடையபட்டி நடராஜன், கீழச்சின்னம்பட்டி கருப்பணன், ஒன்றியக் கவுன்சிலர் சுந்தரமகாலிங்கம், முன்னாள் ஊராட்சித் தலைவர் பாலகுரு ஆகியோரிடையே, சாத்தியாறு அணைக்கு பெரியார் வாய்க்காலிருந்து தண்ணீர் கொண்டு வருவது தொடர்பாக ஆலோசணை நடைபெற்றது.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: