அடாவடி வசூலை கட்டுபடுத்தக்கோரி ஆர்ப்பா ட்டம்..

அடாவடி வசூலில் ஈடுபடும் நிதி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் ஆர்ப்பாட்டம்:

மதுரை

நிதி நிறுவணம் மற்றும் மகளிர் சுய உதவி குழு நுண் கடன் நிறுவனங்களின் அதிரடி வசூலைக் மாவட்ட நிர்வாகம் கட்டுப்படுத்தக்கோரி, மதுரையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் புதன்கிழமை காலை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ரிசர்வ் வங்கியானது, அரசு வணிக வங்கிகள், நிதி நிறுவனங்களிடம் பெற்ற கடனுக்கு வட்டி மற்றும் அசலை கொரோனா முடியும் வரை நிர்பந்திக்கக் கூடாது, என்று உத்தரவிட்டும் மதுரையில் செயல்படும் நிதி நிறுவனங்கள், மகளிர் சுய உதவிக் குழுக்களின் நிர்வாகிகள், வட்டி கேட்டு கடன் பெற்றவர்களை தொந்தரவு செய்வதாக கோரி, மாவட்ட நிர்வாகி கோபிநாத் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில், ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: