பள்ளியை புணரமைத்த ரஜினி மன்றத்தினர்..

அலங்காநல்லூர் அருகே ஆரம்ப பள்ளியை புணரமைத்த ரஜினி மன்றத்தினர்:

அலங்காநல்லூர்

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டம் அலங்காநல்லூர் அருகே இடையபட்டி கிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப பள்ளியை, மதுரை மாவட்ட ரஜினி மக்கள் மன்றத்தினர் மற்றும் இடையபட்டி ரஜினி மன்றத்தினருடன் இணைந்து புணரமைத்து பயன்பாட்டுக்கு அர்ப்பணிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியையொட்டி, ரஜினி மக்கள் மன்றத்தின் சார்பாக பல்வேறு நலத்திட்ட உதவிகளும், நிவாரனப் பொருட்களும் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சிக்கு, ரஜினி மக்கள் மன்ற இளைஞர் அணி துணைச் செயலர் சீமான் செல்லத்துரை தலைமை வகித்தார். மாவட்ட இளைஞர் அணிச் செயலர் காமாட்சி முன்னிலை வகித்தார்.
மதுரை மாவட்ட ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி முகமது ரபீக், பள்ளியை திறந்து வைத்தும், 200 பேர்களுக்கு கொரோனா நிவாரனப் பொருட்களை வழங்கினார்.
மாவட்ட இளைஞர் அணிச் செயலாளர் ஜெயவீரக்குமார், ஒன்றியச் செயலர் விஜயக்குமார் ஆகியோர் வரவேற்றனர்.
மாவட்ட இளைஞர் அணிச் செயலாளர் பாண்டியன், ஒன்றியச் செயலாளர் கருப்பையா, ஒன்றிய துணைச் செயலாளர்கள் விஸ்வநாதன், ராஜதுரை, அய்யூர் ராஜ், மாவட்ட துணை செயலர் சேகர், இராசபாண்டி, அரிகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முடிவில், பள்ளித் தலைமை ஆசிரியை விக்டோரியா ராணி நன்றி கூறினார்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: