திட்டப்பணிகள்..ஆட்சியர் ஆய்வு

மதுரை அருகே திட்டப்பணிகள் ஆட்சியர் ஆய்வு:

மதுரை

மதுரை மாவட்டம்
மேலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.டி.ஜி.வினய்
ஆய்வு மேற்கொண்டார்.

தமிழ்நாடு முதலமைச்சரின் குடிமராமத்துத் திட்டத்தின் கீழ் 2020-2021-ம் ஆண்டிற்கு பாசன விவசாயிகளின் பங்களிப்புடன் நீர் நிலைகளை புனரமைக்கும் விதமாக 34 மாவட்டங்களில் 1387 பணிகள் ரூ.499.79 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ள அரசாணை வழங்கப்பட்டு பணிகள் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகின்றன.
மதுரை மாவட்டத்திற்குட்பட்ட பொதுப்பணித்துறைக்குச் சொந்தமான நீர் நிலைகளை புனரமைக்க 56 பணிகளுக்கு ரூ.31.21 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம் மேலூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கருங்காலக்குடி
நெல்குண்டுபட்டி வயலிக்குளம் கண்மாயில் குடிமராமத்துத் திட்டத்தின் கீழ் ரூ.50 இலட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் குடிமராத்துப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர்
பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அதன் தொடர்ச்சியாக , கொட்டாம்பட்டி வட்டம்
கேசம்பட்டி ஊராட்சியில் உள்ள பெரிய அருவி நீர்த்தேக்கத்தை ஆழப்படுத்துவது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு செய்து பார்வையிட்டார்.
இந்நிகழ்வில், மேலூர் சட்டமன்ற உறுப்பினர்
பெரியபுள்ளான் என்ற செல்வம்,
மேலூர் கோட்டாட்சியர்
ரமேஷ்
மேலூர் வட்டாட்சியர்
சுந்தரபாண்டியன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: