அரசானை வெளியிடக்கோரி..தமிழக மக்கள் முன்ன ேற்றக் கழக ஆர்ப்பாட்டம்

திருவில்லிபுத்தூரில் திடீர் சாலை மறியல்…
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் ஆர்பாட்டம்…..

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகே தேவேந்திரகுல வேளாளர் அரசாணையை உடனடியாக வெளியிடக்கோரி கண்டன ஆர்பாட்டம் நடந்தது.
தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் இருந்து தங்களை வெளியேற்றி, தேவேந்திர குல வேளாளர் என அரசாணை வெளியிட வேண்டும் என்பவதை வலியுறுத்தி, பல்வேறு கட்சிகள் மத்திய மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும் பல்வேறு போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் திருவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்பு தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் தேவேந்திரகுல வேளாளர் அரசாணை வெளியிடக் கோரி கருப்பு சட்டை அணிந்து ஆண்கள், பெண்கள் என 100 க்கும் மேற்பட்டோர் ஆர்பாட்டம் செய்து திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது மத்திய மாநில அரசிற்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினார்கள். வத்திராயிருப்பு போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்லக் கூறியதையடுத்து போராட்டத்தை முடித்துச் சென்றனர். இதனால் அந்தப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: