ஆட்டோ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

அலங்காநல்லூரில் ஆட்டோ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

அலங்காநல்லூர்

ஆட்டோ தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்றக்கோரியும், போலீஸாரின் கெடுபிடியை கட்டுப்படுத்தக் கோரியும், மதுரை அருகே அலங்காநல்லூர் பஸ்நிலையம் அருகே மதுரை மாவட்ட ஆட்டோ சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, மதுரை மாவட்ட ஆட்டோ ஓட்டுநர் சங்கத் தலைவர் கண்ணன் தலைமை வகித்தார்.சிஐடியூ மாவட்டச் செயலர் அரவிந்தன், ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். ஒன்றியச் செயலாளர் உமாமகேஸ்வரன் கண்டன உரை நிகழ்த்தினார். நூறுக்கு மேற்பட்ட ஆட்டோ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: