சசிகலா பிறந்த நாள் விழா

அலங்காநல்லூரில் சசிகலா பிறந்தநாள்: அமமுக ஏற்பாடு

அலங்காநல்லூர்

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் அமமுக சார்பில் முனியாண்டி கோயில் சிறப்பு வழிபாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் பிறந்த நாளையொட்டி நடந்த இந்த நிகழ்ச்சிக்கு, மதுரை வடக்கு மாவட்ட அமமுக செயலாளர் சரவணன் தலைமை வகித்தார்.
மேலூர் ஒன்றியச் செயலாளர் சோமாசி, வாடிப்பட்டி ஒன்றியச் செயலாளர் வக்கீல் கோடீஸ்வரன், மாவட்டதுணைச் செயலாளர் தேவிசுமதி, முன்னாள் ஊராட்சித் தலைவர்கள் தனுஷ்கோடி, பிச்சை உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
விழாவையொட்டி, அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: