லாரி மோதி முதியவர் பலி

இராஜபாளையம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற முதியவர் மீது லாரி மோதி சம்பவ இடத்தில் பலி கீழராஜகுலராமன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள சத்திரப்பட்டி சம்சிகபுரம் பகுதியில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாகனத்தில் சென்ற பால் வயது 60 இவர் அதே பகுதியில் அரிசி கடையில் பணம் வசூல் செய்யும் வேலை செய்து வருகிறார் இன்று வழக்கம் போல் வாடிக்கையாளர் களுக்கு கொடுத்த அரிசிக்கான பணத்தை வசூல் செய்ய இரு சக்கர வாகனத்தில் சென்றபோது எதிரே வந்த இருசக்கர வாகனம் இவர் மேல் மோதியதில் தவறிக் கீழே விழுந்துள்ளார் பின்புறமாக இராஜபாளையத்தில் இருந்து சத்திரப்பட்டி நோக்கி சென்ற லாரி இவர் மீது ஏறியதில் மூளை சிதறி சம்பவ இடத்திலேயே பலியானார் இந்த விபத்து குறித்து கீழராஜகுலராமன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: