சிடி ஸ்கேன் செயல்படுத்தக் கோரி ஆர்ப்பாட ்டம்

இராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சிடி ஸ்கேன் செயல்படுத்த கோரியும் , இராஜபாளையத்தில் இயங்கும் தனியார் ஆம்புலன்ஸ் டிரைவர்கள் குடிபோதையில் வாகனம் ஓட்டுவதால் நோயாளிகள் மற்றும் பொது மக்களிடையே அச்சம் , மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அரசு மகப்பேறு மருத்துவமனை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் கொரோனா தொற்று அதிகாரித்து வரும் நிலையில் அரசு மருத்துவமனையில் அரசு சார்பில் ஆம்புலன்ஸ் குறைவாக இயக்குவதால், உடனே 108 போன்ற ஆம்புலன்ஸ் வர கால தாமதம் ஆவதால் இதனைப் பயன்படுத்தி பொதுமக்கள் மற்றும் நோயாளிகளிடமிருந்து தனியார் ஆம்புலன்ஸ் – கள் அதிகமான கட்டணம் வசூல் கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தனியார் ஆம்புலன்ஸ் இயக்கும் ஓட்டுனர்கள் ஓட்டுனர் உரிமம் இல்லாமலும், குடிபோதையில் ஆம்புலன்ஸ் களை இயக்குவதால் உடன் செல்லும் நோயாளிகள் கொரோனா தொற்று அச்சத்தை விட விபத்தில் உயிர் போய்விடுமோ? என்ற அச்சத்த ஏற்படுத்தியுள்ளது. மேலும் தனியார் ஆம்புலன்ஸ் -ன் கட்டணக் கொள்ளைக்கு மருத்துவமனை ஒரு சில அதிகாரிகள் உடந்தையாக இருப்பதாகவும் , நோயாளிகள் குற்றச்சாட்டு வைக்கின்றனர். எனவே இராஜபாளையத்தில் இயங்கும் தனியார் ஆம்புலன்ஸ் கட்டணத்தை முறைப்படுத்த அரசு முன்வர வேண்டுமெனவும், மேலும் அரசு மருத்துவமனையில் உள்ள சிடி ஸ்கேன் நாள்முழுவதும் செயல்பட வேண்டுமென உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 50க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநில அரசுகள் இதனை உடனடி நடவடிக்கை எடுத்துக் உயிரோடு விளையாடும் தனியார் ஆம்புலன்ஸ் கட்டணக் கொள்ளையை முறைப்படுத்தி, கட்டணத்தின் விவரங்களையும் பொதுவெளியில் அறிவிக்க வேண்டும் என கோரிக்கையை முன்வைத்தனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: