தேவகோட்டையில் மாணவர் சேர்க்கை..

தமிழக அரசின் உத்தரவின்படி மாணவர் சேர்க்கை துவங்கியது:

தேவகோட்டை –

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் புதிய மாணவர் சேர்க்கை நடைபெற்றது.
அனைத்து பள்ளிகளிலும் 1,6,9ம் வகுப்புகளுக்கு, 2020-21ம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கையும், ஒரு பள்ளியில் இருந்து மற்றொரு பள்ளிக்கு மாறுவதன் காரணமாக பிற வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கையும் துவங்கியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் புதிய மாணவர் சேர்க்கை பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமையில் நடைபெற்றது. பள்ளியில் சேரும் போதே மாணவர்களுக்கு விலையில்லா நோட்டு புத்தகம், புத்தக பை வழங்கப்பட்டது.
சமூக இடைவெளியை பின்பற்றி, உரிய கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுடன், மாணவர் சேர்க்கை நடைபெற்றது.ஆசிரியர்கள் செல்வமீனாள் ,முத்துலெட்சுமி,ஸ்ரீதர்,கருப்பையா,முத்துமீனாள் ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: