Connect with us

LatestNews

அணை சீரமைக்கப்படுமா?

Published

on

சாத்தையாறு அணை சீரமைக்கப்படுமா..? – பொதுமக்களின் எதிர்பார்ப்பு குறித்த சிறப்பு தொகுப்பு

மதுரை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரே நீர்த்தேக்கமான சாத்தையாறு அணை தண்ணீரின்றி வறண்டும் ஆக்கிரமிப்புகளால் சிதைந்தும் காணப்படுகிறது. தமிழக அரசு சீரமைக்க முன்வருமா என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். அது குறித்த ஒரு செய்தி தொகுப்பு.

மதுரை மாவட்டம் பாலமேடு அருகே அமைந்துள்ளது சாத்தையாறு நீர்த்தேக்கம். சிறுமலையிலிருந்து தோன்றி வைகையில் கலக்கும் துணை ஆறுகளில் ஒன்றான சாத்தையாறின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது அந்த அணை அதன் பெயராலேயே அழைக்கப்படுகிறது.

சிறுமலை வகுத்து மலை காட்டுநாயக்கன் ஓடை ஆகிய பகுதியில் இருந்து வரும் தண்ணீர் சாத்தையாறு அணை யில் சேகரிக்கப்படுகிறது. இந்த அணையின் உயரம் 29 அடி. இதன் நீர்ப்பிடிப்பு பகுதி சற்றேறக்குறைய 400 ஹெக்டேராகும். பாலமேடு அலங்காநல்லூர் இப்பகுதிகளை சுற்றியுள்ள நிலங்கள் பாசன வசதி பெறுவதற்கும் மதுரையின் குடிநீர் தேவைக்காகவும் கடந்த 1965ஆம் ஆண்டு சாத்தையாறு அணை கட்டப்பட்டது.

இதுகுறித்து கீழ சின்னனம்பட்டி ஊராட்சித் தலைவர் இரமேஷன் கூறுகையில், மதுரை மாவட்டத்தில் நீர்ப்பிடிப்பு பகுதி உள்ள ஒரே அணை இதுவாகும். சிறுமலை பகுதியில் மழை பெய்தால் அடுத்த ஓரிரு நாட்களில் இந்த அணை நிரம்பிவிடும். இந்த அணையில் இருந்து வெளியேறுகின்ற தண்ணீர், அணையின் கீழே இருக்கின்ற கீழ சின்னனம்பட்டி எர்ரம்பட்டி சுக்காம்பட்டி அழகாபுரி கோவில்பட்டி ஐயூர் குறவன் குளம் முடுவார்பட்டி ஆதனூர் உள்ளிட்ட கண்மாய்களுக்கு நீர் ஆதாரமாக விளங்குகிறது.இந்த கண்மாய்கள் நிரம்பி 13 ஆண்டுகள் ஆகிவிட்டன.

மிகவும் செல்வம் கொழித்த இந்த பகுதி தற்போது தண்ணீர் இல்லாமல் மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து நிற்கின்றனர்.விளை நிலங்களை அதிக விலைக்கு விற்க முடியாமல் செங்கல்களை வாசல்களுக்கு விற்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்’ என்கிறார்

இந்தப் பகுதியை சுற்றி ஏறக்குறைய 400க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த செங்கல் சூளைகளால் வனவளம் பாதிக்கப்படுவதாக மற்றொரு குற்றச்சாட்டு உள்ளது. கடைசியாக கடந்த வர்தா புயலின்போது அணையின் நீர்மட்டம் பாதி அளவிற்கேனும் உயர்ந்தது. ஆனால் தற்போது சுத்தமாய் தண்ணீர் வரத்து நின்று விட்டது என்கின்றனர் இப்பகுதி பொதுமக்கள். இதற்கு காரணம் அணையின் மேற்புறம் பல்வேறு பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் உள்ளதாகவும் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

மதுரை மாவட்ட நீர் மேலாண்மை குழுவின் ஒருங்கிணைப்பாளராக உள்ள சிபி ரவி கூறுகையில், மதுரை மாநகர மக்களின் குடிநீர் தேவைக்காக சாத்தையாறு அணை பெருமளவு பயன்படுகிறதுஅதனை இன்னும் கூடுதலாகி முழுமையாக பயன்படுத்த வேண்டும் என்பதுதான் எங்களது நோக்கம் முல்லைப் பெரியாறு வைகை அணையை மட்டுமே நம்பாமல் மதுரை மாவட்டத்தில் இருக்கின்ற இந்த அணையை முழுவதுமாக பயன்படுத்த வேண்டும் என்கிறார்.

மதுரையின் நிலத்தடி நீருக்கு பெரும் பங்காற்றுகின்ற வண்டியூர் கண்மாய் மாடக்குளம் கண்மாய் தென்கால் கண்மாய்களைப் போன்ற சாத்தையாறு அணையும் மிக முக்கியமான ஒன்றாகும். பல்லுயிர் சூழல் மிகுந்த சாத்தையாறு அணை பல்வேறு உயிரினங்களின் உயிர் வாழ்க்கைக்கு உத்தரவாதம் ஆகவும் திகழ்கிறது.

சமூக ஆர்வலர் துரை விஜய பாண்டியன் கூறுகையில், இந்த அணையை சுற்றி உள்ள மலைப் பகுதிகளில் பல்வேறு வகையான குரங்கினங்கள், காட்டெருமைகள், காட்டு பன்றிகள், நரிகள் உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன அவை அனைத்துமே தற்போது தண்ணீர் இல்லாத காரணத்தால் அணைக்கு தண்ணீர் தேடி வந்து இங்கேயே உயிர் துறக்கும் அவல நிலையும் உள்ளது. ஆகையால் சாத்தியார் அணையை தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் பொதுப்பணித் துறையும் உடனடியாக சீரமைக்க முன்வர வேண்டும் என்கிறார்

ஏறக்குறைய நான்காயிரம் ஏக்கருக்கும் மேலான நிலங்கள் பாசன வசதி பெறுவதுடன், சுற்றியுள்ள கிராமங்களின் குடிநீர் ஆதாரமாகவும் சாத்தையாறு அணை திகழ்ந்து வருகிறது. இந்த அணையை சேர் அமைப்பதற்கான பணியை போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு துவங்கினால் சுற்றில் உள்ள அனைத்து கிராம மக்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படுவதோடு, மதுரையின் குடிநீர் தேவைக்கான நிரந்தர தீர்வும் எட்டுவதற்கு வாய்ப்பு உண்டு…

Continue Reading
Advertisement
Click to comment

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

LatestNews

கொரோனா விழிப்புணர்வு பிரசார வாகனம்:

Published

on

மதுரையில் கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம்: அமைச்சர் தொடங்கிய வைப்பு:

மதுரை:

மதுரை மாநகராட்சி
கொரோனா விழிப்புணர்வு தொடர் பிரச்சார விழாவை,
வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர்
பி.மூர்த்தி
துவக்கி வைத்தார்.
மதுரை மாநகராட்சி மாட்டுத்தாவணி எம்.ஜி.ஆர்.பேருந்து நிலையத்தில், கொரோனா விழிப்புணர்வு தொடர் பிரச்சார விழாவை, மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.அனீஷ்சேகர்,
மாநகராட்சி ஆணையாளர் மரு.கா.ப.கார்த்திகேயன்,
ஆகியோர் தலைமையில், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர்
பி.மூர்த்தி, இன்று (01.08.2021) துவக்கி வைத்தார்.
அமைச்சர் மூர்த்தி பேசியதாவது:
தமிழ்நாடு முதலமைச்சர், கொரோனா மூன்றாவது அலையின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொரோனா விழிப்புணர்வு தொடர் பிரச்சாரத்தை நேற்றைய தினம் சென்னையில் துவக்கி வைத்தார்கள். அதன்படி ,மதுரை மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து மாட்டுத்தாவணி எம்.ஜி.ஆர்.பேருந்து நிலையத்தில், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கொரோனா விழிப்புணர்வு தொடர் பிரச்சார விழா இன்று துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
கொரோனா மூன்றாம் அலை வராமல் தடுப்பதற்கு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிராமப்புறம், நகர்ப்புறங்களில் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த நிகழ்ச்சி மிகவும் உதவியாக இருக்கும். பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணியவும், கைகளை சோப்புக் கொண்டு கழுவுதல், சமூக இடைவெளியினை கடைப்பிடிப்பது, கூட்டம் அதிகமாக கூடுவதை தவிர்ப்பது உள்ளிட்ட கொரோனா நோய் தொற்று விழிப்புணர்வு தொடர்பான பிரச்சார நிகழ்ச்சிகள் ஒரு வார காலத்திற்கு தொடர்ந்து நடைபெற உள்ளது. மதுரை மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் மூன்றாவது அலையை எதிர்கொள்ளும் விதமாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக ,மதுரை மாவட்டத்தில் தேவைக்கு அதிகமான ஆக்சிஜன் இருப்பு மற்றும் படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
இந்த பிரச்சாரத்தின் மூலமாக பொதுமக்களுக்கு கொரோனா சம்பந்தப்பட்ட விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக ரயில்நிலையம், பேருந்து நிலையம், பொதுமக்கள் அதிகம் கூடும் முக்கிய இடங்களில் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்படும். மேலும், சிற்றேடுகள், டிவிட்டர், முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்கள் மூலமாகவும், மாணவர்களுக்கு குறும்பட போட்டிகள், ஓவியப்போட்டிகள், கொரோனா விழிப்புணர்வு வாசகத்தை உருவாக்குதல், எப்.எம்.ரேடியோ மூலம் கேள்வி பதில் நிகழ்ச்சி, மீம்ஸ் உருவாக்குதல் போன்றவற்றின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்துதல், கிராமிய கலைஞர்கள் மூலம் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகள் போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. மேலும், நோய் எதிர்ப்பு தன்மை அதிகரிக்க கபசுர குடிநீர்; வழங்குதல் மற்றும் கிராம அளவில், வார்டு அளவில், மண்டல அளவில் 100 சதவீதம் கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்று, கொரோனா தொற்றினை முற்றிலும் தடுப்பதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் எடுக்கும் அனைத்து நடவடிக்கை களுக்கும் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என்றார்.
முன்னதாக, அமைச்சர் தலைமையில், கொரோனா விழிப்புணர்வு உறுதி மொழி ஏற்கப்பட்டது. உறுதிமொழி: கொரோனா ஒருவரிடமிருந்து மற்றவருக்கு பரவும் என்பதனை நான் அறிவேன், அதனை தவிர்க்க, 1) பொது இடங்களுக்கு செல்லும்போது கண்டிப்பாக முகக்கவசம் அணிவேன். 2) மற்றவர்களிடமிருந்து குறைந்த பட்சம் 6 அடி இடைவெளியினை கடைப்பிடிப்பேன். 3) சோப்பும் தண்ணீரும் கொண்டு அடிக்கடி கைகளை சுத்தம் செய்வேன். 4) நான் கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொள்வதோடு மற்றவர்களையும் தடுப்பூசி எடுத்துக்கொள்ள ஊக்கப்படுத்துவேன். 5) இந்த உயிர்க்கொல்லி வைரஸ் பரவுவதை தடுக்க நான் அரசின் அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளையும் கடைப்பிடிப்பேன். 6) மற்றவர்களையும் கொரோனாவிற்கு பொருத்தமான வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க வலியுறுத்துவேன். 7) கொரோனா மூன்றாம் அலையினை தடுக்க எப்பொழுதும், விழிப்புடன் இருப்பேன் என்று உறுதி கூறுகிறேன். என்று அனைவரும் சேர்ந்து உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில், சட்டமன்ற உறுப்பினர்
பூமிநாதன், மாவட்ட வருவாய் அலுவலர்
செந்தில்குமாரி, நகர்நல அலுவலர் மரு.குமர குருபரன், உதவி ஆணையாளர்
பிரேம்குமார், உதவி நகர்நல அலுவலர் மரு.தினேஷ்குமார்,மக்கள் தொடர்பு அலுவலர்
மகேஸ்வரன், உதவி மக்கள் தொடர்பு அலுவலர்
வினோத், சுகாதார அலுவலர்
ராஜ்கண்ணன் உட்பட மாநகராட்சி அலுவலர்கள், காவல் துறையினர், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Continue Reading

LatestNews

ஸ்மார்ட் சிட்டி பணிகள் ஆய்வு:

Published

on

மதுரை மாநகராட்சி
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ்; நடைபெற்று வரும் பல்வேறு பணிகளை, ஆணையாளர் மரு.கா.ப.கார்த்திகேயன், மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.அனீஷ் சேகர், ஆகியோர் ஆய்வு:

மதுரை:

மதுரை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பல்வேறு பணிகளை ஆணையாளர்
மரு.கா.ப.கார்த்திகேயன், மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.அனீஷ்சேகர், ஆகியோர் தலைமையில், இன்று (31.07.2021) ஆய்வு மேற்கொண்டனர்.
மதுரை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கீழ் பெரியார் பேருந்து நிலையம் மேம்படுத்துதல், பழைய சென்ட்ரல் மார்க்கெட் பகுதியில் பல்லடுக்கு வாகனம் நிறுத்துமிடம் அமைத்தல், வைகை ஆற்றங்கரையினை மேம்படுத்துதல், புராதன சின்னங்களை இணைக்கும் புராதன வழித்தடங்கள் அமைத்தல், புதுமண்டபத்தில்; உள்ள கடைகளை குன்னத்தூர் சத்திரத்தில் மாற்றி அமைத்தல், மீனாட்சியம்மன் கோவிலை சுற்றியுள்ள நான்கு சித்திரை வீதிகள் மற்றும் மீனாட்சி பூங்காவினை, மேம்படுத்துதல்,ஜான்சிராணி பூங்கா பகுதியில் சுற்றுலா பயணிகளுக்கான வருகை மையம் மற்றும் அங்காடி அமைத்தல், திருமலை நாயக்கர் மகாலை சுற்றியுள்ள பகுதிகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் விரைந்து முடிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன்படி பெரியார் பேருந்து நிலையத்தில் ரூ.167.06 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் மேம்பாட்டு பணிகளை ஆய்வு மேற்கொண்டு பெரியார் பேருந்து நிலையத்தில் முதற்கட்டமாக நகரப்பேருந்துகள் இயக்கி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருமாறு கூறினார்கள். பெரியார் பேருந்து நிலையம் அருகில் ரூ.2.75 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள சுற்றுலா தகவல் மையத்தினையும், பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். மேலும் அருள்மிகு மீனாட்சியம்மன் கோவிலுக்கு, அருகாமையில் உள்ள ஜான்சிராணி பூங்காவில் ரூ.2.45 கோடி மதிப்பீட்டில் மாற்றி அமைக்கப்பட்டு, சுற்றுலாப் பயணிகளின் அத்தியாவசியத் தேவையினை பூர்த்தி செய்யும் வகையில் நவீன வசதிகளுடன் கூடிய புராதன சின்னம் விற்பனை அங்காடிகள் கட்டப்பட்டு, முன்புறம் பயணிகள் அமரும் வகையில் இருக்கைகள் மற்றும் அலங்கார புல்வெளிகளும், பயணிகளின் வசதிக்காக குளியலறை மற்றும் கழிப்பறை வசதிகள் செய்யப்பட்டு உள்ளதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
தொடர்ந்து, அருள்மிகு மீனாட்சியம்மன் கோவில் அருகில் ரூ.41.96 கோடி மதிப்பீட்டில் பல்லடுக்கு வாகன நிறுத்துமிடம் கட்டப்பட்டு வருகிறது. இந்த வாகன காப்பகத்தில் நவீன வசதிகளுடன் இரண்டு அடித்தளங்கள் கொண்ட பல்லடுக்கு வாகன (110 எண்ணம் நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 1401 எண்ணம் இரு சக்கர வாகனங்கள் நிறுத்தம் வகையில்) நிறுத்துமிடம் அமைக்கப்பட்டு வருகிறது. இக்கட்டிடங்களில் நடைபெற்று வரும் கட்டுமானம் உள்ளிட்ட அடிப்படை மற்றும் பாதுகாப்பு வசதிகள் குறித்தும், மேலும் புதுமண்டபத்தில் உள்ள டெய்லரிங் கடைகள், புத்தகக்கடைகள், பாத்திர கடைகள் உள்ளிட்ட கடைகளை மாற்றுவதற்காக ரூ.7.13 கோடி மதிப்பீட்டில் குன்னத்தூர் சத்திரத்தில் கட்டப்பட்டுள்ள கடைகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
மதுரை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வைகை ஆற்று முகப்பு மேம்பாட்டு பணிகளான ஆற்றுப்படுகையை சமப்படுத்துதல், ராஜா மில் சாலை முதல் குருவிக்காரன் சாலை வரை வைகை ஆற்றின் இருபக்க கரைகளிலும் தடுப்பு சுவர் கட்டுதல், சாலைகள் அமைத்தல், நடைபாதைகள் அமைத்தல், பசுமை பகுதியை உருவாக்குதல், பூங்காக்கள் அமைத்தல், சுகாதார அமைப்புகள் ஏற்படுத்துதல், அலங்கார விளக்குகள் உள்ளிட்ட பணிகள் ரூ.84.12 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி தெப்பக்குளம் மாரியம்மன் திருக்கோவில், பின்புறம் வைகை ஆற்றின் சாலை விரிவாக்கத்திட்டத்தின் கீழ் இருகரைகளிலும் புதிதாக நான்கு வழிச்சாலைகள் அமைக்கப் பட்டுள்ள பணிகளை பார்வையிட்டனர். மேலும் ,ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் குருவிக்காரன் சாலை சந்திப்பு பகுதியில் ஆற்றின் குறுக்கே செல்லும் தரைப்பாலத்தினை ரூ.23.17 கோடி மதிப்பீட்டில் உயர்மட்டப் பாலம் மாற்றுவதற்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதையும், வைகை ஆற்றின் ஆழ்வார்புரம் பகுதி வரை அமைக்கப்பட்டுள்ள நான்கு வழிச் சாலை பணிகளை பார்வையிட்டு, வைகை ஆற்றில் உள்ள ஆகாயதாமரைகள் மற்றும் தேவையில்லாத குப்பைகளை உடனுக்குடன் அகற்றி பணிகளை விரைந்து முடிக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலருக்கு உத்தரவிட்டனர்.
இந்த ஆய்வின்போது, நகரப்பொறியாளர் (பொ)
சுகந்தி, செயற்பொறியாளர்
ராஜேந்திரன், உதவிசெயற்பொறியாளர்
ஆரோக்கிய சேவியர், மக்கள் தொடர்பு அலுவலர்
மகேஸ்வரன், உதவிப் பொறியாளர்கள்
ஆறுமுகம்,
கந்தப்பா, தல்லாகுளம் காவல் உதவி ஆணையர் (போக்குவரத்து)
மாரியப்பன், தமிழ்நாடு அரசுபோக்குவரத்து கழக பொது மேலாளர்
இளங்கோவன், துணை மேலாளர் திரு.ரவிக்குமார்,
நடராஜன், தேசிய நெடுஞ்சாலை கோட்டப்பொறியாளர்
சேதுராஜன், மாநில நெடுஞ்சாலை கோட்டப் பொறியாளர்கள்
பிரசன்னா,
பாண்டியன் உட்பட மாநகராட்சி அலுவலர்கள், காவல்துறையினர் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Continue Reading

LatestNews

பட்டாசு ஆலையில் வெடி விபத்து:

Published

on

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து.
விபத்தில் சிக்கி, தொழிலாளி ஒருவர் உடல் சிதறி பரிதாப பலி…..

சிவகாசி :

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள வி.சொக்கலிங்கபுரம் பகுதியில், திருத்தங்கல் பகுதியைச் சேர்ந்த அய்யனார் (40) என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. மாவட்ட வருவாய் அலுவலர் உரிமம் பெற்ற இந்த பட்டாசு ஆலையில், 5 அறைகளில் பட்டாசு தயாரிக்கும் பணிகள் வழக்கம் போல நடைபெற்று வந்தது. 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். பட்டாசு தயாரிக்கும் மூலப்பொருள் கலவை செய்யும் அறையில், மீனம்பட்டி ஜான்சிராணி காலனியைச் சேர்ந்த ஆனந்தராஜ் (60), மருந்து கலவை பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக, மூலப்பொருட்களில் உராய்வு ஏற்பட்டு திடீர் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் மருந்து கலவை அறை முற்றிலும் இடிந்து தரைமட்டமானது. இந்த விபத்தில் சிக்கிய ஆனந்தராஜ் உடல் சிதறி பரிதாபமாக பலியானார். விபத்து தகவலறிந்த சிவகாசி தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து சென்று, விபத்தில் சிக்கி சிதறிக்கிடந்த ஆனந்தராஜின் உடலை மீட்டு, சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து நடந்த பட்டாசு ஆலைக்கு விரைந்து சென்ற சிவகாசி காவல் துணை கண்காணிப்பாளர் பாபுபிரசாந்த், பட்டாசு மற்றும் தீப்பெட்டி தனித்தாசில்தார் சிவஜோதி விசாரணை நடத்தினர். விபத்து குறித்து சிவகாசி கிழக்கு காவல்நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Continue Reading

சினிமா..

Follow me on Twitter

Dhinasari News

இந்த ஆண்டும் ‘விடியல்’ இல்லை! முக்கியக் கோவில்களில் பக்தர் தரிசனத்துக்கு தடை!

பழமுதிர்ட்சோலை முருகன் கோயில் ஆகியவற்றில் பக்தர்கள் தரிசனம் செய்ய வரும் 2ஆம் தேதி முதல் 9 ஆம் தேதி வரை தடை விதிக்க முடிவு செய்ய இந்த… [...]

ஜூலை 31: தமிழகத்தில் 1,986 பேருக்கு கொரோனா; 26 பேர் உயிரிழப்பு!

தமிழகத்தில் இன்றைய கொரொனா பாதிப்பு விவரம்... ஜூலை 31: தமிழகத்தில் 1,986 பேருக்கு கொரோனா; 26 பேர் உயிரிழப்பு! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி. [...]

வலிமை ரிலீஸ்க்கு நெருக்கும் போனி கபூர்!

படத்தில் பணியாற்றும் பலரும் ராப்பகலாக வேலை செய்ய வேண்டிய சூழ்நிலை. வலிமை ரிலீஸ்க்கு நெருக்கும் போனி கபூர்! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி. [...]

சிறுமியை கிணற்றிலிருந்து மீட்ட 8 வயது சிறுவன்! ஆட்சியர் பாராட்டு!

8 வயது லோஹித், கிணற்றில் குதித்து லித்திகாவை மீட்டு கரைக்கு கொண்டு வந்தார். சிறுமியை கிணற்றிலிருந்து மீட்ட 8 வயது சிறுவன்! ஆட்சியர் பாராட்டு! முதலில் தினசரி… [...]

எல்லோர் முன்பாக காதலியை இழுத்து சென்று ரூம் கதவை அடைத்த காதலன்! உள்ளே கேட்ட சத்தத்தால் அதிர்ந்த நண்பர்கள்!

அறைக்குள் சென்றதும் உள்பக்கமாக பூட்டிக் கொண்டிருக்கிறார். இதனால் மாணவியின் நண்பர்கள் அனைவரும் பதறி அடித்துக் கொண்டு கதவை தட்டியுள்ளனர் எல்லோர் முன்பாக காதலியை இழுத்து சென்று ரூம்… [...]

Follow Us

ஆன்மிகம்…

Trending

Copyright © 2020 Daily Tamil News Developed and Maintained by SSS Media, Chennai TN, IN

%d bloggers like this: