நிவாரனம் வழங்கிய முதியவரை பாராட்டிய ஆட் சியர்..

அதிகாரிகளை வைத்து தேடப்பட்ட முதியவர்:

ஒன்பதாம் முறையாக கொரோனா நிதி வழங்கிய முதியவரை பாராட்டி சான்றிதழ் வழங்கிய ஆட்சியர்:

மதுரை

மதுரையில் ஒன்பதாம் முறையாக யாகசம் பெற்ற பணத்தில் ரூ. 10 ஆயிரம் வழங்கிய முதியவரை பாராட்டி சான்றிதழ் வழங்கினார் மதுரை மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய்.
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர் கூழ்பாண்டியன். இவர் மதுரையில் மாட்டுத்தாவணி, காய்கறி மார்க்கெட் பகுதியில் யாசகம் பெற்று பிழைப்பு நடத்தி வருகிறார்.
இவர் தாம் யாகச பணத்தில் சாப்பாட்டுக்கு போக மீதியுள்ள பணத்தில் பள்ளிக் கூடங்களுக்கு தளவாட சாமான்கள் வாங்கவும், பல சமுதாயப் பணிகளை ஆற்றி வருகிறார்.
இவர், இதுவரை கொரோனா தடுப்பு பணிகளுக்கு எட்டு தடவை தலா ரூ. 10 ஆயிரம் வீதம் ரூ. 80 ஆயிரம், மதுரை மாவட்ட ஆட்சியரிடம் நேரிடையாக வந்து வழங்கியுள்ளார்.
இவரை, சுதந்திரதினத் தன்று மதுரை மாவட்ட ஆட்சியர் வினய் கௌரவப்படுத்தி விரும்பி, அதிகாரிகளை அனுப்பி அழைத்து வர கேட்டுக் கொண்டார்.
ஆனால், இவரை யாரும் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நிலையில், திங்கள்கிழமை கூழ்பாண்டியன் ஒன்பதாவது தடவையாக ரூ. 10 ஆயிரம் கொரோனாவுக்கு நன்கொடையாக வழங்க வந்திருந்தார். அவரை, ஆட்சியர் பாராட்டியதுடன், சான்றிதழும் வழங்கினார்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: