சமுதாயக் கூடம்..மக்கள் கோரிக்கை

சமுதாய கூடம்: மேலவாசல் மக்கள் நில மீட்புக் குழு ஆட்சியரிடம் கோரிக்கை

மதுரை

மதுரை பெரியார் பஸ்நிலையம் அருகே மேலவாசல் பகுதியில் அரசு சார்பில் சமுதாயக் கூடம் கட்டித் தரவேண்டும் என, அப்பகுதியினர் மற்றும் மேலவாசல் மக்கள் நில மீட்புக் குழுவினர் திங்கள்கிழமை மதுரை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை அடங்கிய மனு அளித்தனர்.
அந்த மனுவில் கோரியுள்ளதாவது:
மதுரை பெரியார் பஸ்நிலையம் திடீர் நகர் பகுதிகளில் அரசு அதிகாரிகள் வந்து மண் பரிசோதணைக்கு அப் பகுதியில் உள்ள மண்ணை எடுத்து சென்றனராம்.
சில நாள்கள் கழித்து அரசு அதிகாரிகள் வந்து அப்பகுதியில் அம்ரூத் திட்டத்தின் கீழ் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டவுள்ளதாக பலகை வைக்கப்பட்டது.
இதையடுத்து அப்பகுதி மக்கள் ஒன்று திரண்டு, மேல்நிலை நீர்த் தேக்க தொட்டி கட்டாமல் சமுதாயக் கூடம் அமைக்க வலியுறுத்தி, தேசிய தாழ்தப்பட்டோர் ஆணையம், மதுரை மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி கமிஷனர் ஆகியோருக்கு மனுக்களை தபால்கள் மூலம் அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் மீண்டும், அதே பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டதாக தெரிகிறது.
இதனால் கொதியெழுந்த அப்பகுதி மக்களும், மேலவாசல் மக்கள் நில மீட்புக் குழுவினரும் சேர்ந்து கோரிக்கை அடங்கிய மனுவை, ஆட்சியரிடம் வழங்கினர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: