அதிமுக இளைஞர் அணி உறுப்பினர் சேர்க்கை

திருப்பரங்குன்றத்தில் அதிமுக சார்பில் இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது.

மதுரை :

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா திருப்பரங்குன்றம் 16 கால் மண்டபம் அருகே அதிமுக சார்பில் எம்.ஜி.ஆர் இளைஞர் அணி உறுப்பினர் சேர்க்கும் படிவம் வழங்கப் பட்டது.

இதில் மதுரை வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எம்எல்ஏ ராஜன்செல்லப்பா தலைமையில் நடைபெற்றது . மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் ஒன்றிய செயலாளர் முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர் இதில் 300 இளைஞர்கள் கொண்டனர் .

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எம்.எல்.ஏ.
ராஜன் செல்லப்பா கூறியதாவது

வரும் 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சியமைக்கும்.

இதற்காக கழகத்தில் உள்ள இளைஞர்கள், தகவல் தொழில்நுட்ப பிரிவினர், அனைத்து அணியினரும் ஒருங்கிணைந்து சபதம் எடுத்து கழகத்தை வெற்றியடையச் செய்ய வேண்டும் .

இ.பாஸ் திட்டத்தில் தற்போது தமிழக அரசு எளிய முறை கொண்டு வந்துள்ளதால் அனைவருக்கும் இபாஸ் கிடைக்கும் என ராஜன் செல்லப்பா கூறினார்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: