பணி நிரந்தரம் டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்ப ாட்டம்..

பணி நிரந்தரம் கோரி டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

அலங்காநல்லூர்

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் கேட்டுக் கடையில் அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் செய்தனர்.
டாஸ்மாக் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்து, காலமுறை ஊதியம் வழங்கவேண்டும், கேரளா மதுக்கடை நிர்வாக முறையை டாஸ்மாக்கில் அமல்படுத்த வேண்டும், கோவிட்- 19 .நோய் தொற்று காரணமாக இறந்த பணியாளர்களின் குடும்பத்துக்கு ரூ. 50 லட்சம் இழப்பீடு வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் டாஸ்மாக் தொழிலாளர்கள் விடுதலை முன்னணி பொதுச் செயலர் முத்துப் பாண்டி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: