மதுரையில் கொரோனா குறைந்து வருகிறது..அமைச ்சர்

அரசு மருத்துவமனைகளில் அமைச்சர் மற்றும் அரசு செயலர் ஆய்வு:

மதுரை

மதுரை மாவட்டம்
திருமங்கலம் அரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறை அரசு முதன்மை செயலர் டாக்டர்.ஜெ.இராதாகிருஷ்ணன்
தலைமையில் ,
வருவாய் பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர்
ஆர்.பி.உதயகுமார்
கொரோனா வைரஸ் நோய்த்தடுப்பு தொடர்பாக
ஆய்வு மேற்கொண்டு மருத்துவர்களுடன் ஆலோசனை நடத்தி தெரிவித்தாவது:
மருத்துவமனை வசதிகளை மேம்படுத்துவதற்கு இந்த ஆய்வு நடைபெற்று கொண்டிருக்கிறது.
தமிழ்நாடு முதலமைச்சர்
உத்தரவிற்கிணங்க அரசுச் செயலாளர்
வழிகாட்டு நெறிமுறைககளை வழங்குகிறார்.
ஒவ்வொரு அரசு அலுவலர்கள்
முன்கள பணியாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு சேவை செய்வது குறித்து எடுத்துரைத்தார்.
இந்தியாவிலேயே அதிகமான கொரோனா காய்ச்சல் பரிசோதனை தமிழ்நாட்டில்தான் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அரசு எடுத்துவரம் நடவடிக்கையின் மூலம் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.
மதுரை மாவட்டத்தல் கடந்த சில வாரங்களுக்கு முன்பாக கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 சதவீதமாக உயர்ந்து இருந்தது. மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் உத்தரவால் மதுரை மாவட்டத்தில் ஊரகம் மற்றும் நகர்புறங்களில் உள்ள அனைத்து இடங்களிலும் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு வீடுகளுக்கே சென்று காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட பின்பு தற்போது கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2.5 சதவிகிதமாக குறைந்துள்ளது என தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், சுகாதாரத்துறை த் அரசு முதன்மை செயலர்
தெரிவிக்கையில்:
அரசு அலுவலர்கள் மற்றும் முன்கள பணியாளர்கள் பொதுமக்கள் ஒத்துழைப்புடன் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் மிக சிறப்பாக மேற்கொண்டு வருகின்றனர். கடந்த சில வாரங்களுக்கு முன்பு கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் இருந்த நிலையில் மதுரை மாவட்டத்தில் நடத்தப்பட்ட காய்ச்சல் முகாம்களால் நோய்த் தாக்கம் குறைந்துள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் சிகிச்சைக்காக மருத்துவ கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்காக இரண்டு அரசாணைகள் மூலம் 150 கோடி ஒதுக்கப்பட்டது.

முன்னதாக,
வருவாய் பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர்
கள்ளிக்குடி வட்டம் வில்லூர் கிராமத்தில் கொரோனா வைரஸ் காய்ச்சல் மருத்துவ முகாமினை துவக்கிவைத்து பார்வையிட்டார்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: