முப்பெரும் விழா

மதுரையில் முப்பெரும் விழா:

மதுரை

மதுரை பைபாஸ் ரோட்டில், தேசீய சமூக சேவா மற்றும் ஆன்மீக விழிப்புணர்வு பேரவையின் சார்பில் முப்பெரும் விழாவையொட்டி, நிவாரனப் பொருட்கள் வழங்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு பொறியாளர் எஸ். பிராபகரன் தலைமை வகித்தார். தேசீய சமூக சேவா சங்கத்தின் தலைவர் ஆர். பெருமாள் முன்னிலை வகித்தார்.
பேராசிரியர் கருப்பையா, அரசரடி பாஜக மண்டலத் தலைவர் சீமான் சரவணன் வரவேற்றார்.
பாஜக மாநில பொதுச் செயலாளர் இரா. சீனிவாசன், நிவாரணப் பொருட்களை வழங்கினார்.
மதுரை பாஜக மாவட்ட பொதுச் செயலர் பாலகிருஷ்ணன், தேசீய சேவா சங்க துணைத் தலைவர் ரவிச்சந்திரன், சுந்தர்ராஜன், பிரச்சார செயலாளர் ரேணுகாதேவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சதிஷ்பாபு நன்றி கூறினார்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: