இந்தியன் ஆயில் ஆஃபர்

60 நாளில் அறுவடை இந்தியன் ஆயிலில் பெட்ரோல் போடுங்க.. சொகுசு காரை ஓட்டிச் செல்லுங்க.. ஐஓசியின் சூப்பர் ஆஃபர்

மதுரை ரூ 200-க்கு பெட்ரோல் போடும் வாடிக்கையாளர்களுக்கு அறுபது நாட்களில் காத்திருக்கும் சொகுசு கார் பம்பர் பரிசு பெறுவது நீங்களாகவும் இருக்கலாம்… என இந்தியன் ஆயில் கார்ப்ரேஷன் சார்பில் நடத்தப்பட்ட அறுவடை 60 விழாவில் அறிவிப்பு வெளியானது.

ரூ. 200-க்கு பெட்ரோல் போடும் வாடிக்கையாளர்களுக்கு ஐஓசி வழங்கும் செம ஆஃபர்
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் சார்பில் விற்பனையை மேம்படுத்த வரும் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் பல்வேறு சலுகைகளை அறிவித்து நடைமுறைப்படுத்தி வருகிறது.

இதன் அடிப்படையில் மதுரை மண்டல இந்தியன் ஆயில் கார்ப்ரேஷன் சார்பில் விற்பனை மேம்படுத்துவதுகுறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி கே.கே.நகர். மொய்தீன் ஆண்டவர் பெட்ரோல் பங்கில் நடைபெற்றது. இதில் முதன்மை கோட்ட மேலாளர் ராஜாராம் ஆலோசனையின் பேரில் நடைபெற்ற விழாவில் மதுரை கோட்ட முதன்மை மேலாளர் சண்முகவேல், முதுநிலை மேலாளர் சந்தர், விற்பனை மேலாளர் சைதன்யா, விற்பனை அதிகாரி அருனிசா , எக்ஸ்ராரிவாட் மேலாளர் கனேஷ்
உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

60 நாட்களில் ரூ 200 ரூபாய்க்கு பெட்ரோல் போடும் வாடிக்கையாளர்களிடம் கேட்கப்படும் கேள்விக்கு சரியான விடை அளிக்கும் வாடிக்கை யாளர்களுக்கு குலுக்கல் முறையில் தேர்வு செய்து ஒரு நபருக்கு கார் பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: