அவனியாபுரத்தில் சுதந்திர தினம்

*_74 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மதுரை அவனியாபுரத்தில் திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் (திமுக) Dr.சரவணன் தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்தினார்_*

இன்று நாடு முழுவதும் 74 ஆவது சுதந்திர தின விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.,

அந்த வகையில் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஒன்றியத்துக்கு உட்பட்ட அவனியாபுரத்தில் காமராஜர் நகரில் அமைந்துள்ள காமராஜர் சிலைக்கு காமராஜர் குடியிருப்போர் நல சங்கத்தின் சார்பாக திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் சரவணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.,

அதனைத்தொடர்ந்து 74 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய கொடி கம்பத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.,

இந்நிகழ்ச்சியில் காமராஜர் குடியிருப்போர் நல சங்க தலைவர் போஸ் அருள்ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: