சோழவந்தானில் சுதந்திர தினவிழா..

சோழவந்தான் பகுதியில் 74 ஆவது சுதந்திர தின விழா

சோழவந்தான்,ஆக.16-
சோழவந்தான் பகுதியில் உள்ள பள்ளிக்கூடங்கள் அரசு அலுவலங்கள் தனியார் நிறுவனங்கள் அரசியல் கட்சியினர் 74 ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செய்து இனிப்பு வழங்கினர்.

பள்ளிக்கூடங்கள்

சோழவந்தான் எம் வி எம் கலைவாணி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் நடந்த சுதந்திர தின விழாவில் தாளாளர் மருது பாண்டியன் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். மாநில பிஜேபி விவசாய அணி துணைத் தலைவர் மணி என்ற முத்தையா இனிப்பு வழங்கினார். நிர்வாகி வள்ளியம்மாள் வரவேற்றார். முதல்வர் விஜயா நன்றி கூறினார்.சி.எஸ்.ஐ. தொடக்கப்பள்ளியில் தலைமையாசிரியர் ராபின்சன் செல்வகுமார் தலைமையில் துப்புரவுப் பணியாளர் சரஸ்வதி தேசிய கொடி ஏற்றி வைத்தார் பெற்றோர் ஆசிரியர் கழக ஆலோசகர் ஆதி பெருமாள் இனிப்பு வழங்கினார்.சத்திரம் ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தலைமையாசிரியர் ராஜாத்தி, புதூர் நடுநிலைப் பள்ளியில் தலைமையாசிரியர் ஜெயந்தி, மண்ணாடிமங்கலத்தில் தலைமையாசிரியர் பூங்குடிஆகியோர் தலைமையில் சுதந்திர தின விழா நடந்தது தேசிய கொடியை ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கினார்கள்

அலுவலகங்கள்

சோழவந்தான் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் பாலாஜி,தீயணைப்பு நிலையத்தில் நிலைய அலுவலர் ஸ்ரீனிவாசன்,பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலர் ஜீலான்பானு தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். இளநிலை உதவியாளர் முத்துக்குமார் இனிப்பு வழங்கினார். அரசு ஆஸ்பத்திரியில் தலைமை மருத்துவர் தீபா தேசிய கொடி ஏற்றி வைத்தார். அரசு போக்குவரத்து கழக கோவில் கிளை மேலாளர் கொடி ஏற்றி வைத்து இனிப்பு வழங்கினார். காங்கிரஸ் கட்சி சோழவந்தான் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பாக கொடியேற்றி இனிப்பு வழங்கினார்கள். ரிஷபம் கிராமத்தில் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் பழனியப்பன் கொடியை ஏற்றி வைத்து இனிப்பு வழங்கினார் இதில் கணேசன், முத்து,கருப்பு உள்பட பலர் கலந்து கொண்டனர். சோழவந்தான் கடைவீதியில் முன்னாள் வார்த்தை சங்க தலைவர்,மொழிப்போர் தியாகி ஸ்ரீராமுலு நினைவாக முககவசம் வழங்கினார்கள் இதில் முன்னாள் பேரூராட்சி தலைவர் எம்.கே.முருகேசன்,வர்த்தக சங்க துணைத்தலைவர் ஜவகர்லால், ஹோட்டல் மற்றும் டீக்கடை உரிமையாளர் சங்க ஆலோசகர் வெங்கடேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.ஆர்.எம்.எஸ்.காலனி குடியிருப்போர் நல சங்கத்தின் சார்பாக சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது தலைவர் சபாபதி தலைமை தாங்கினார்.பொருளாளர் சந்திரசேகர்,உதவி தலைவர் செல்வம், உதவி செயலாளர் பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நூலகர் ஆறுமுகம் வரவேற்றார். முன்னாள் ராணுவ வீரர் முருகேசன் தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செய்தார்.இன்ஜினியர் ரவிச்சந்திரன் இனிப்பு வழங்கினார். தனசேகர் நன்றி கூறினார்.சோழவந்தான் தமிழ்நாடு அரசு உழவர் உணவகம் சார்பாக 74 வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.முள்ளிப்பள்ளம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமி மாட்டான் தலைமை தாங்கினார்.காங்கிரஸ் கமிட்டி நகரச் செயலாளர் பரமசிவம் முன்னிலை வைத்தார்.உழவர் உணவகம் நிர்வாகி சேது வரவேற்றார்.கல்லூரி முதல்வர் பழனிசாமி கொடியேற்றி வைத்தார். அமைப்பாளர் ராமர்,மீனாள், சோலைமலை,தங்கவேலு, கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் பேசினார்கள். உழவன் உழவன் உணவகம் அமைப்பாளர் போதுமாரி நன்றி கூறினார்

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: