LatestNews
அதிமுக தலைமை அலுவலகத்தில் முக்கிய ஆலோசன ை…
LatestNews
உறவின்முறை நிர்வாகிகள் தேர்தல்..

மதுரை பந்தல்குடி கிராமம் ஆதி திராவிடர் உறவின்முறை தலைவர் தேர்தல் நடந்தது. பு.பாலகிருஷ்ணன், வா.சொக்கர், அமாரியப்பன், மொ.மாய அழகர், மு.ரவிச்சந்திரன் ஆகியோர் போட்டியிட்டனர். கிராமத்தை சேர்ந்த 1500 பேர் வாக்களித்தனர். தேர்தல் பார்வையாளர் வக்கீல் சரவணன் தலைமையில் தேர்தல் நடந்தது.
LatestNews
பூமிபூஜை

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி முடுக்கங்குளம் ஊராட்சியில் சுத்தகரிக்கப்பட்ட குடிநீர் திட்டம் அமைப்பதற்கான பூமி பூஜை ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி முத்துச்சாமி தலைமையில் நடைபெற்றது.
LatestNews
ராணுவ வீரர் உடலுக்கு மரியாதை
26- 2 – 21
இந்திய திபேத் எல்லை பாதுகாப்பு படையில் பணியாற்றும் மதுரை இராணுவ வீரரின் உடலுக்கு துணை இராணுவத்தினர் 39 குண்டுகள் முழங்க அஞ்சலி:
கிராமமே சோகத்தில் மூழ்கியது, கடைகள் முழுவதும் அடைப்பு.:
மதுரை
மதுரை கிழக்கு தாலுகாவில் உள்ள பொய்கைகரைப்பட்டியினைச் சேர்ந்த பாலச்சாமி இந்திய திபேத் எல்லை பாதுகாப்பு படையில் கடந்த 14 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்காக சொந்த ஊர் வந்து கடந்த பிப்ரவரி 3ந் தேதி மீண்டும் பணிக்கு திரும்பியுள்ளார். இந்நிலையில் கடந்த 24 ந் தேதி மாலையில் சத்திஸ்கர் மாநிலத்தில் நக்ஸல்கள் பதுக்கி வைத்திருந்த கண்ணி வெடிகளில் சிக்கி எதிர்பாராவிதமாக உயிரழந்துள்ளார். அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உடல் பெங்களுரில் இருந்து துணை இராணுவ வாகனம் மூலம் தரை மார்க்கமாக சொந்த ஊரான பொய்கை கரைப்பட்டி கிராமத்திற்கு இன்று துணை இராணுவ வீரர்கள் கொண்டு வந்தனர். பின்னர் உறவினர்களிடம் பிரேத உடல் ஒப்படைக்கப்பட்டது. பிரேத உடலை பார்த்தவுடன் உறவினர்கள் கிராம மக்கள் அனைவரும் கதறி அழுதனர்.
மாவட்ட ஆட்சியர் அன்பழகன் பிரேத உடலுக்கு மலர் அஞ்சலி செய்து விட்டு பால்ச்சாமியின் மனைவி ராமலெட்சுமியிடம் ரூ 20 லட்சத்திற்க்கான காசோலையை வழங்கி ஆறுதல் கூறினார். அதனைத் தொடர்ந்து பிரேத உடலுக்கு துணை ராணுவத்தினர் கமாண்டர் பானு பிர தாப் சிங், துணை கமாண்டர் ராஜேஸ் மீனா ஆகியோர் தலைமையில் அஞ்சலி செய்தனர் பின்னர் அவரது உடலை துணை இராணுவத்தினர் மற்றும் கிராம பொது மக்கள் மயானத்திற்க்கு சுமந்தே கொண்டு சென்றனர். அங்கு துணை இராணுவத்தினர் பிரேத உடலை சவப்பெட்டியிலிருந்து மயானத்தில் வைத்தனர். அதன் பின்னர் மூவர்ண தேசியக் கொடியினை போர்த்தினர். துணை ராணுவத்தினர் 13 பேர் வரிசையில் நின்று, 3 தடவை 39 குண்டுகள் வானை நோக்கி சுட்டனர். பிரேத உடலில் போர்த்தப்பட்ட கொடி அவரது தந்தையிடம் கமாண்டர் வழங்கினார். அதன் பின்னர் பிரேத உடல் எரியூட்டப்பட்டது.
இறந்தவருக்கு ராமலட்சும் என்ற மனைவியும் அவருக்கு நிதிக்ஸா என்ற இரன்று வயது பெண் குழந்தையும் உள்ளது. இறப்பை முன்னிட்டு பொய்கை கரைப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தது. கிராமங்களே சோகத்தில் மூழ்கின.