தமிழர் தேசீய இயக்கம் ஆர்ப்பாட்டம்

வெளிமாநிலத் தொழிலாளர்களை பணியில் அமர்த்தக்கூடாது எனக் கோரி, தமிழர் தேசிய பேரீயக்கம் ஆர்ப்பாட்டம்

மதுரை

தமிழகத்தில் பணிக்கு தமிழக தொழிலாளர்களை அனுமதிக்க வேண்டும், வெளி மாநிலத்தவர்களுக்கு ரேசன் கார்டு, ஆதார் அட்டைகள் வழங்காதே, தமிழ்நாட்டில் அமைப்புசாரத் தொழிலாளர்களுக்கு வேலை வழங்கும் வாரியம் அமைத்திடு, தமிழக உரிமைகளை பறிக்காதே என, வலியுறுத்தி, மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வாசலில், வியாழக்கிழமை தமிழக தேசீய பேரீயக்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, அவ்வியக்கத்தினர் தமிழகத்தில் உள்ள துறைகளில் காலிப் பணியிடங்களில் தமிழர்களை கொண்டுதான் நிரப்ப வேண்டும் என, கோஷமிட்டனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: