LatestNews
இரண்டு குழந்தைகள் இறப்பு

தேவகோட்டையில் தாயை தொடர்ந்து ஆபத்தான நிலையில் இருந்த 2 குழந்தைகள் இறப்பு
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் வீட்டை காலி செய்ய சொல்லி மாமியாரும், அவரது தம்பியும் வற்புறுத்தியதால் கடந்த ஆக.4-ம் தேதி பெண் தற்கொலை செய்து கொண்டார். ஆபத்தான நிலையில் இருந்த அவரது 2 குழந்தைகள் ஒரு வாரத்திற்கு பிறகு இன்று இறந்தனர்.
தேவகோட்டை சிதம்பரநாதபுரம் மெயின் ரோட்டைச் சேர்ந்தவர் வசந்தா. இவரது வளர்ப்பு மகன் ராமதாஸ் (40). அவரும், அவரது மனைவி பிரியதர்ஷினி (36), மகள் பர்வதவர்த்தினி (16), மகன்கள் திருநீலகண்டன் (14), ஹரிகிருஷ்ணன் (12) ஆகியோருடன் வசந்தா வீட்டில் வசித்து வந்தனர். மூன்று மாதங்களுக்கு முன் உடல் நலக்குறைவால் ராமதாஸ் இறந்தார்.
இந்நிலையில் மாமியார் வசந்தா, அவரது சகோதரர் ராஜேந்திரன் ஆகியோர் பிரியதர்ஷினியிடம் வீட்டை காலி செய்யுமாறு தொடர்ந்து வற்புறுத்தி வந்தனர். இந்நிலையில் ஆக.3-ம் தேதி இரவு ராஜேந்திரன் மிரட்டி, பிரியதர்ஷினியை தாக்கியுள்ளனர். இதனால் மனமுடைந்த பிர்யதர்ஷனி ஆக.4-ம் தேதி காலை தனது மூன்று குழந்தைகளுக்கு விஷத்தை கொடுத்துவிட்டு தானும் அருந்தினார்.
சம்பவ இடத்திலேயே பிர்யதர்ஷனி இறந்தார். ஆபத்தான நிலையில் இருந்த மூன்று குழந்தைகளும் சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து தேவகோட்டை நகர் போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் மகள் பர்வதவர்த்தினி, மகன் திருநீலகண்டன் ஆகியோர் இன்று சிகிச்சை பலனின்றி இறந்தனர். ஹரிகிருஷ்ணனும் தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளார்.
LatestNews
யாகசாலை அமைக்கும் பணி

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நாளை தொடங்குகிறது சிறுவர் சிறுமியர்கள் குடங்கள் எடுத்து வருகின்றனர் சோழவந்தான் ஜன 22 சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் வருகிற 25 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது இதையொட்டி நாளை காலை 5 மணி அளவில் யாக பூஜை தொடங்குகிறது 9 மணியளவில் வைகை ஆற்றில் சிறுவர் சிறுமியர்கள் தீர்த்த குடம் எடுத்து நான்கு ரத வீதிகளிலும் வலம் வந்து கோவிலை வந்து அடைந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது நாளை மறுநாள் தொடர்ந்து யாக பூஜை நடைபெற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பூஜை தொடங்கி ஒன்பது ஐந்து மணியிலிருந்து ஒன்பது 55 மணிக்குள் ராஜகோபுரம் விமானம் மும்மூர்த்தி மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது இதைத் தொடர்ந்து விநாயகர் முருகன் ஜெனகை மாரியம்மன் உட்பட பரிகார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெறுகிறது விழாவுக்கு வருகை தரும் அனைவருக்கும் அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது விழா ஏற்பாடுகளை திருப்பணிக்குழு தலைவர் சுப்ரமணியன் செட்டியார் கௌரவத் தலைவர் மாணிக்கம் எம்எல்ஏ இணைச்செயலாளர் கொரியர் கணேசன் உதவி தலைவர்கள் முருகேசன் மணி என்ற முத்தையா பால்பாண்டி சின்னப்பாண்டி ஜவகர் செயல் அலுவலர்கள் இளஞ்செழியன் இளமதி ஆலயப் பணியாளர்கள் பூபதி வசந்த் கவிதா ஆகியோர் செய்து வருகின்றனர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுஜித் குமார் உத்தரவின்பேரில் சமையல் துணை கண்காணிப்பாளர் ஆனந்த ஆலோசனை பேரில் இன்ஸ்பெக்டர் வசந்தி பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து மருத்துவ விழிப்புணர்வு மற்றும் ஆலோசனை முகாம் பேரூராட்சி இருந்து சுகாதார ஏற்பாடு கூடுதல் திருவிளக்கு கூடுதல் கழிப்பறை வசதிகள் குடிநீர் வசதிகள் செய்து வருகின்றனர் சோழவந்தான் அரசு பஸ் டிப்போவில் இருந்து சிறப்பு பேருந்துகளை இயக்க ஏற்பாடு செய்து வருகின்றனர் படவிளக்கம் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு யாகசாலை அமைக்கும் பணி நடைபெற்ற போது எடுத்த படம்
LatestNews
விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன்…

அம்மா அரசு கூட்டுறவு துறையில் தமிழக விவசாயிகளுக்கு ரூபாய் 59 ஆயிரம் கோடி வட்டி இல்லா கடன் உதவி அமைச்சர் செல்லூர் கே ராஜூ பெருமிதம்.
சோழவந்தான் ஜன:
தமிழகத்தில் 1.78 ஆயிரம் விவசாயிகளுக்கு கூட்டுறவு துறை வங்கி மூலம் ரூபாய் 59 ஆயிரம் கோடி வட்டியில்லா கடனுதவி அம்மா அரசு வழங்கியுள்ளது என கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே ராஜூ பேசினார். மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதி திருப்பரங்குன்றம் யூனியன் கீழமாத்தூர் ஊராட்சியில் கூடுதலாக ரூபாய் 15 லட்சம் சட்டமன்ற மேம்பாட்டு நிதியில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டுவதற்கான பூமிபூஜை அமைச்சர் செல்லூர் கே ராஜூ துவக்கி வைத்து பேசியதாவது கீழமாத்தூர் 20 கிராம மக்கள் உடல்நலம் பயன்பெறும் வகையில் 60 லட்சம் ரூபாய் நிதியில் ஆரம்ப சுகாதார நிலையம், இப்பகுதியில் அனைவருக்கும் குடிநீர் கிடைக்க ரூபாய் 45 லட்சம் நிதியில் திட்டப் பணி நடக்கிறது மேலும் 1.60 லட்சத்தில் குடிநீர் திட்ட பணி ரூபாய் 17.50லட்சம் நிதியில் விரிவாக்க கிரீன் கார்டன் பகுதியில் புதிய ரோடு அமைக்கப்பட்டுள்ளது இதுவரை 1.58 கோடியில் பாலம் சாலை பேவர் பிளாக் தெரு அமைத்தல் திட்ட பணி நிறைவு பெற்றுள்ளது. காலணி முதல் வைகை ஆற்றின் கரை வரை ரூபாய் 4.60 லட்சம் நிதியில் பேவர் பிளாக் பதிக்கும் பணி நிறைவு மேலமாத்தூர் இல் ரூபாய் 5 லட்சத்தில் குடிநீர் திட்ட பணி நிறைவு ரூபாய் 5 லட்சத்தில் நிழற்குட அமைக்கும் பணி 38 குடும்பங்களுக்கு ரூபாய் 1.50 லட்சம் திட்டத்தில் வீடுகள் பணி வழங்கப்பட்டது கீழமாத்தூர் ரூபாய் 52 ஆயிரத்து மின்விளக்குகள் கூடுதலாக இப்பகுதி கிராமங்கள் வளர்ச்சிக்காக ரூபாய் 6.18 கோடி பணிகள் நிறைவு பெற்றுள்ளன அம்மா ஆட்சியில் சிறு குறு கிராமங்கள் வரை வளர்ச்சித் திட்ட பணிகள் நிறைவு பெற்றுள்ளன திமுக ஆட்சி காலத்தில் கிராம மக்களின் மேம்பாடு அடைய பணிகள் செய்யவில்லை திமுக தலைவர்கள் குடும்பங்கள்தான் கோடிக்கணக்கில் ஊழல் செய்து வளர்ந்து உள்ளனர், தமிழக மக்களுக்காக எதுவும் செய்யவில்லை ஆனால் அம்மாவின் அரசு கிராமங்களை தேடிச்சென்று
தாய்ப்பறவை இறைக்காக காத்திருக்கும் குஞ்சுகளை தேடி செல்வது போல் அதிமுக அம்மா அரசு தமிழக மக்களின் அடிப்படை வசதி கோரிக்கைகளை நிறைவேற்றி வருகிறது என்பது உண்மையாகும்,
இதுவரை நான் வகித்த கூட்டுறவுத்துறை மூலம் 1.78 ஆயிரம் தமிழக விவசாயிகளுக்கு ரூபாய் 59 ஆயிரம் கோடி வட்டியில்லா கடனுதவி வழங்கி உள்ளோம், கீழமாத்தூரில் கூடுதலாக 60 லட்சம் லிட்டர் குடிநீர் மேல்நிலை தொட்டி அமைந்து உள்ளது மதுரை மேற்கு தொகுதி சட்டமன்ற மேம்பாட்டு நிதியில் ரூபாய் 15 லட்சம் நிதியில் பூமி பூஜை நடந்து உள்ளது
இது போல் எண்ணற்ற திட்டப்பணிகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி துணை முதல்வர் பன்னீர்செல்வம் தலைமையிலான அம்மாஅரசு இன்னும் பல பணிகளை தமிழக மக்களுக்காக செய்கிறது எங்களது எஜமானர்களான நீங்கள் தொகுதி மக்கள் மறவாது மீண்டும் அம்மா ஆட்சி தொடர இரட்டை இலைக்கு ஆதரவு தர வேண்டுகிறேன் என்று அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேசினார், இந்நிகழ்ச்சியில் கீழமாத்தூர் ஊராட்சி தலைவர் ராஜாத்தி துரைப்பாண்டி தலைமை வகித்தார் பரவை பேரூராட்சி முன்னாள் சேர்மன் பரவை ராஜா, வில்லாபுரம் ராஜா, ஊராட்சி தலைவர்கள் கந்தசாமி அபிராமி மணிகண்டன் கிளைச் செயலாளர் சாகுல் மைதீன் அஜ்மீர் தங்கராஜ் சண்முகநாதன் கருப்பணன் கூட்டுறவு துறை வங்கி தலைவர் முத்தையா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
LatestNews
22 January, 2021 13:28

கீழடியில் 7 ஆம் கட்ட அகழாய்வு பிப்ரவரி முதல் வாரத்தில் தொடக்கம் என தமிழக தொல்லியல்த்துறை இணை இயக்குனர் சிவானந்தம் தகவல்
கீழடி :
சிவகங்கை மாவட்டம்
கீழடி, மணலூர், அகரம், கொந்தகை ஆகிய 4 இடங்களில் 7 ஆம் கட்ட அகழாய்வு பிப்ரவரி முதல் வாரத்தில் தொடக்கம்
7 ஆம் கட்ட அகழாய்வு பணிகளுக்கு மத்திய அரசின் தொல்லியல்த்துறை அனுமதி அளித்து உள்ளது
அகழாய்வு தொடங்கப்படும் தேதியை விரைவில் தமிழக அரசு அறிவிக்கும்
2015 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை 6 கட்டங்களாக அகழாய்வு நடைபெற்று உள்ளது
இதுவரை நடைபெற்ற அகழாய்வில் 2,600 ஆண்டுகளுக்கு முன்னர் கீழடியில் நகர நாகரீகம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது
தங்கப் பொருட்கள், தமிழ் பிராமி எழுத்துக்கள், முதுமக்கள் தாழி, மனித மற்றும் விலங்கு எலும்பு கூடுகள் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது