ஆண் குழந்தை மீட்பு..

பிறந்து ஒருநாள் ஆன ஆண் குழந்தை மீட்பு காவல்துறையினர் விசாரணை

புதுக்கோட்டை, ஆக
12.

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் தெற்கு கிராமத்தில் உள்ள மேக்க குளம் அருகிலுள்ள பேருந்து நிறுத்தத்தில் பிறந்த ஒரு நாள் ஆனா ஆண் குழந்தை பைக்குள் வைக்கப்பட்டு நிலையில் இன்று காலை கண்டெடுக்கப்பட்டது. குழந்தையை மீட்ட கீரமங்கலம் தெற்கு வட்ட கிராம நிர்வாக அலுவலர் கீரமங்கலம் அரசு மருத்துமனைக்கு முதல் கட்ட சிகிச்சைக்கு சேர்த்து அதன் பின் அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது. தற்போது மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு. குழந்தை நலமுடன் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். ஊரடங்கு காலத்தில் பிறந்த ஒரு நாளே ஆன நிலையில் குழந்தையை விட்டுச் சென்றவர் யார் என்று வருவாய், சுகாதாரம் மற்றும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: