பண்ணாட்டு விளையாட்டு விருதை பெற்ற மதுரை மாணவர்

*International Sports Star Award விருதை வென்ற மதுரை மாணவன் ஜெ. அதீஸ்ராம்*

இந்தாண்டிற்கான National Sports & Physical Fitness Board “International Sports Star Award” விருதை மதுரை விராட்டிபத்தைச் சேர்ந்த ஜெ.அதீஸ்ராம் (10 வயது) வென்றுள்ளார். இந்த விருதை ஹரியானாவை தலைமையிடமாகக் கொண்ட National Sports & Physical Fitness Board அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் தேசிய, சர்வதேசிய அளவில் விளையாட்டு போட்டிகளில் சாதனை படைத்து சிறந்து விளங்குபவர்களை தேர்ந்தெடுத்து விருது வழங்கி வருகிறார்கள். பல பிரிவுகளை உள்ளடக்கிய விருது பிரிவு பட்டியலில் சர்வதேசிய விருதுக்கான பிரிவில் தமிழகத்தை சேர்ந்த இவர் ஒருவர் மட்டுமே தேர்வாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச சிலம்பம் போட்டியில் முதல் பரிசு தங்கம் வென்றதற்காக இந்த சர்வதேச விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக மதுரை விராட்டிபத்து ஸ்ரீ மாருதி சிலம்பம் பள்ளியில் சிலம்பம் கற்றுவருகிறார். இவர் செக்கானூரணி கேரன் பள்ளியில் 5ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த ஆண்டு (2019) செப்டம்பர் 14-15 தேதிகளில் மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டியில் இரட்டைக் கம்பு பிரிவில் முதலிடம் பெற்றார். இவர் பல்வேறு மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளார். 2018ஆம் ஆண்டு பஞ்சாபில் நடந்த தேசிய போட்டியிலும் சிலம்பத்தில் முதல் பரிசு பெற்றார்.
மாணவர் அதீஸ்ராமின் தனி சிறப்புகளின் சில…….
– ஸ்கேட்டிங் ஓட்டிக்கொண்டு வேகமாக சிலம்பம் சுற்றுவது இவரது தனிச் சிறப்பு.
– அதோடு களரி, கட்டைக்கால், வில்வித்தையை சிறப்பு பயிற்சியில் நிறைவு பகுதியை எட்டியுள்ளார்.
– கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் மாவட்ட, மாநில அளவில் அறுபதிற்கும் மேற்பட்ட சிலம்பம் போட்டிகளில் பங்கு பெற்றதோடு அனைத்திலும் பெற்றுள்ளார் என்பது இவரது மற்றொரு சிறப்பம்சமாகும்.
குறிப்பு :
கொரோனா எதிரொலியாக இவ்விருது தபால் மூலம் அனுப்பி வைத்துள்ளார்கள்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: