கிருஷ்ண ஜயந்தி விழா

பாலமேட்டில் கோகுலாஷ்டமி

சமூக இடைவெளியுடன் பக்தர்கள் தரிசனம்

அலங்காநல்லூர்

மதுரை மாவட்டம் பாலமேட்டில் அமைந்துள்ள கோகுல கிருஷ்ணர் ஆலயத்தில் கிருஷ்ணர் ஜயந்தி விழாவானது செவ்வாய்க்கிழமை மாலை கொண்டாடப்பட்டது.
இதையொட்டி, இக் கோயிலில் அமைந்துள்ள கோகுலகிருஷ்ணருக்கு சிறப்பு அபிஷேக, பூஜைகள் நடைபெற்றது.
இதில் கிராம மக்கள் பலர் கலந்து கொண்டு கோவிந்தா, கோவிந்தா என கோஷமிட்டனர்.
மேலும், பக்தர்கள் கிருஷ்ணருக்கு பிடித்தமான அவுல், சீடை, நாவல்பழம், வெண்ணெய், பிரசாதங்களை படைத்து கிருஷ்ணரை மனம் உருகி வழிபட்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை கிருஷ்ண ஜயந்தி விழாக் குழுவினர் செய்திருந்தனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: