அதிமுக நிர்வாகிக்கு அரிவாள் வெட்டு

நரிக்குடி அதிமுக நிர்வாகிக்கு சரமாரியாக அரிவாள் வெட்டு…..
படுகாயத்துடன் மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை…..

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே நரிக்குடி கட்டனூர் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திகை கண்ணன் (27). இவர் அதிமுக கட்சியின் நரிக்குடி மேற்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்பப்பிரிவு நிர்வாகியாக இருந்து வருகிறார்.
கடந்த உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற கட்டனூர் ஊராட்சி மன்ற தலைவருக்கு உதவியதாக கார்த்திகைக் கண்ணனுக்கும், அதே ஊரைச் சேர்ந்த சிலருக்கும் தேர்தல் முன்விரோதம் இருந்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், நேற்று இரவில் கார்த்திகைக் கண்ணன் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது மர்மநபர்கள் கார்த்திகைக் கண்ணனை அரிவாள், இரும்புக்கம்பி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் சரமாரியாகத் தாக்கிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். படுகாயமடைந்த கார்த்திகைக் கண்ணனை அருகில் இருந்தவர்கள் மீட்டு, மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்துள்ளனர். மேலும் கார்த்திகைக் கண்ணனை தாக்கியதாக கட்டனூரைச் சேர்ந்த நான்கு பேரை, சந்தேகத்தின் பேரில் திருச்சுழி போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: