LatestNews
சுதந்திர தினவிழா ஆலோசனைக் கூட்டம்

சுதந்திர தினவிழா முன்னேற்பாடு கூட்டம்:
மதுரை, ஆக. 10.
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்,
இந்திய சுதந்திர தினவிழா கொண்டாடுவது தொடர்பான முன்னேற்பாடு பணிகள் குறித்து
அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனைக்கூட்டம் இன்று
மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.டி.ஜி.வினய்
தலைமையில் நடைபெற்றது.
இந்திய சுதந்திர தினவிழாவிற்கான அழைப்பிதழ் அச்சிடுதல்,
விழா நடைபெறும் ஆயூதப்படை மைதானத்தை தயார்படுத்துதல்
விழா மேடை மற்றும் பந்தல் அமைத்தல்
விழாவிற்கு வருகை தருகின்ற பல்வேறு துறைகளின் சார்பில் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்கான பயனாளிகளின் பெயர் பட்டியல் தயார் செய்தல்
சிறப்பாக பணியாற்றக் கூடிய அலுவலர்களை கண்டறிந்து அவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்குவதற்கான பட்டியல்களை தயார் செய்தல் போன்ற பணிகள் மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும்,
காவல்துறை,
தீயணைப்புத்துறை,
தேசிய மாணவர் படை,
தேசிய சமூக நலப்பணி படை,
ஊர்க்காவல் படை சார்பில் அணி வகுப்பு மரியாதை செய்தல்.
விழா நடைபெறும் இடத்தில் போதுமான அளவில் குடிநீர் வசதி
போக்குவரத்து வசதி,
போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்தல் , மேலும்,
சுதந்திர தின விழாப்பணிகளை வருவாய்த்துறை,
கல்வித்துறை,
காவல் துறை,
ஊரக வளர்ச்சித்துறை,
போக்குவரத்துத்துறை,
பொதுப்பணித்துறை மற்றும் அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து பணியாற்றிட ஆலோசனைகள் மற்றும் அறிவுரைகள் வழங்கப்பட்டது. சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் அவர்களது வாரிசுகளுக்கு அவர்களது இருப்பிடத்திற்கே சென்று மரியாதை செலுத்த சம்பந்தப்பட்ட வட்டாட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
விழா நடைபெறும் இடத்தில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அடங்கிய மருத்துவக் குழுக்கள் பரிசோதனை மேற்கொள்ள தயார் நிலையில் இருப்பதற்கும்
கலந்து கொள்ளும் அனைவரும் முகக்கவசம் அணிந்து வர அறிவுறுத்தவும்
விழா நடைபெறும் இடத்தில் கிருமிநாசினி கொண்டு தூய்மைப்படுத்தவும்
போதுமான சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
இக்கூட்டத்தில்
காவல் கண்காணிப்பாளர்
சுஜித் குமார்,
கூடுதல் ஆட்சியர்(வளர்ச்சி)
ப்ரியங்கா பங்கஜம்,
மாவட்ட வருவாய் அலுவலர்
செல்வராஜ் ,
மதுரை வருவாய் கோட்டாட்சியர்
முருகானந்தம்
மண்டல இணை இயக்குநர்(கால்நடை பராமரிப்பு)
ராஜதிலகம் அவர்கள்ää உதவி இயக்குநர்(ஊராட்சி)
.செல்லதுரை
உதவி இயக்குநர்(பேரூராட்சி) எஸ்.
சேதுராமன்
பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர்
லீலாவதி
உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
LatestNews
பூமிபூஜை

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி முடுக்கங்குளம் ஊராட்சியில் சுத்தகரிக்கப்பட்ட குடிநீர் திட்டம் அமைப்பதற்கான பூமி பூஜை ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி முத்துச்சாமி தலைமையில் நடைபெற்றது.
LatestNews
ராணுவ வீரர் உடலுக்கு மரியாதை
26- 2 – 21
இந்திய திபேத் எல்லை பாதுகாப்பு படையில் பணியாற்றும் மதுரை இராணுவ வீரரின் உடலுக்கு துணை இராணுவத்தினர் 39 குண்டுகள் முழங்க அஞ்சலி:
கிராமமே சோகத்தில் மூழ்கியது, கடைகள் முழுவதும் அடைப்பு.:
மதுரை
மதுரை கிழக்கு தாலுகாவில் உள்ள பொய்கைகரைப்பட்டியினைச் சேர்ந்த பாலச்சாமி இந்திய திபேத் எல்லை பாதுகாப்பு படையில் கடந்த 14 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்காக சொந்த ஊர் வந்து கடந்த பிப்ரவரி 3ந் தேதி மீண்டும் பணிக்கு திரும்பியுள்ளார். இந்நிலையில் கடந்த 24 ந் தேதி மாலையில் சத்திஸ்கர் மாநிலத்தில் நக்ஸல்கள் பதுக்கி வைத்திருந்த கண்ணி வெடிகளில் சிக்கி எதிர்பாராவிதமாக உயிரழந்துள்ளார். அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உடல் பெங்களுரில் இருந்து துணை இராணுவ வாகனம் மூலம் தரை மார்க்கமாக சொந்த ஊரான பொய்கை கரைப்பட்டி கிராமத்திற்கு இன்று துணை இராணுவ வீரர்கள் கொண்டு வந்தனர். பின்னர் உறவினர்களிடம் பிரேத உடல் ஒப்படைக்கப்பட்டது. பிரேத உடலை பார்த்தவுடன் உறவினர்கள் கிராம மக்கள் அனைவரும் கதறி அழுதனர்.
மாவட்ட ஆட்சியர் அன்பழகன் பிரேத உடலுக்கு மலர் அஞ்சலி செய்து விட்டு பால்ச்சாமியின் மனைவி ராமலெட்சுமியிடம் ரூ 20 லட்சத்திற்க்கான காசோலையை வழங்கி ஆறுதல் கூறினார். அதனைத் தொடர்ந்து பிரேத உடலுக்கு துணை ராணுவத்தினர் கமாண்டர் பானு பிர தாப் சிங், துணை கமாண்டர் ராஜேஸ் மீனா ஆகியோர் தலைமையில் அஞ்சலி செய்தனர் பின்னர் அவரது உடலை துணை இராணுவத்தினர் மற்றும் கிராம பொது மக்கள் மயானத்திற்க்கு சுமந்தே கொண்டு சென்றனர். அங்கு துணை இராணுவத்தினர் பிரேத உடலை சவப்பெட்டியிலிருந்து மயானத்தில் வைத்தனர். அதன் பின்னர் மூவர்ண தேசியக் கொடியினை போர்த்தினர். துணை ராணுவத்தினர் 13 பேர் வரிசையில் நின்று, 3 தடவை 39 குண்டுகள் வானை நோக்கி சுட்டனர். பிரேத உடலில் போர்த்தப்பட்ட கொடி அவரது தந்தையிடம் கமாண்டர் வழங்கினார். அதன் பின்னர் பிரேத உடல் எரியூட்டப்பட்டது.
இறந்தவருக்கு ராமலட்சும் என்ற மனைவியும் அவருக்கு நிதிக்ஸா என்ற இரன்று வயது பெண் குழந்தையும் உள்ளது. இறப்பை முன்னிட்டு பொய்கை கரைப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தது. கிராமங்களே சோகத்தில் மூழ்கின.
LatestNews
படம்

*மதுரை டவுன்ஹால் ரோட்டில் பயங்கர மின்னணு கடையில் பயங்கர தீ விபத்து:
மதுரை
மதுரை டவுன்ஹால் ரோடு பெருமாள் தெப்பக்குளம் அருகே மின்னணு சாதனங்கள் விற்பனை செய்யும் 200 கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.
இந்நிலையில் நேற்று 10.45 மணிக்கு டவுன்ஹால் ரோடு வடக்கு பெருமாள் தெப்பம் திடீரென ஒரு மின்னணு கடையில் இருந்து புகை வருவதை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.
உடனடியாக, டவுன் தீயணைப்புத் துறையினர் மற்றும் மீட்புக்குழுவினர் உள்ளிட்ட 5 க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் 50க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் 5 மணி நேரமாக போராடி தீயை அணைத்தனர்
ஒரு கடையில் ஏற்பட்ட தீ மளமளவென 15க்கும் மேற்பட்ட கடைகளில் பற்றி எரிந்தது.
3 கோடி ரூபாய் மதிப்புள்ள மின்னணு பொருட்கள் எரிந்து சாம்பலாயின.
இந்த விபத்து குறித்து திடீர் நகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.