மழை தொடர்பான முன்னேற்பாடு கூட்டம்

பருவமழையின் காரணமாக முன்னேற்பாடு கூட்டம்:

மதுரை, ஆக. 10.

மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் வடகிழக்கு பருவமழையின் காரணமாக மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.டி.ஜி.வினய்
தலைமையில்
இன்று
நடைபெற்றது.
இக்கூட்டத்தில் ,மாவட்ட ஆட்சித்தலைவர்
பேசும்போது தெரிவித்ததாவது:-
மதுரை மாவட்டத்தில் வழகிழக்கு பருவமழை மூலம் அதிகம் பாதிக்கக்கூடிய இடங்களை முதலில் கண்டறியவேண்டும். ஏற்கனவே மதுரை மாவட்டத்தில் 27 இடங்கள் பாதிக்கக்கூடிய இடங்கள் என கண்டறியப்பட்டுள்ளது.
இதுபோன்ற இடங்களில் வருவாய்த்துறை,
உள்ளாட்சித்துறை,
காவல்துறை,
பொதுப்பணித்துறை
நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட துறைகள் கொண்ட அலுவலர்கள் குழு ஆய்வு மேற்கொண்டு தேவையான பணிகளை மேற்கொள்ளவேண்டும்.

மாநகராட்சி,
நகராட்சி,
பேரூராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில் சிறுபாலங்கள்
கால்வாய்கள் போன்றவற்றில் தங்குதடையின்றி தண்ணீர் செல்ல வடிகால் வசதியினை சுத்தப்படுத்திட வேண்டும்.
பொதுப்பணித்துறை அலுவலர்கள் குளங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதோடுää அணைகளின் நீர்மட்டத்தை தொடர்ந்து கண்காணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும்,
கூடுதல் மணல் மூட்டைகள்
ஜே.சி.பி. இயக்குபவர்களின் தொலைபேசி எண்கள்
மின் மர அறுவை இயந்திரங்கள்
தண்ணீர் வெளியேற்றும் மோட்டார்கள்,
கூடுதல் மின் கம்பங்கள்
தாழ்வான மின் ஒயர்களை மாற்றுதல்
படகுகள் மற்றும் நீச்சல் வீரர்கள் தயார்படுத்துதல்
அவசர கால மருத்துவக் குழுக்கள்
பயிர்சேதம்,
கால்நடை சேதங்கள் மற்றும் பாம்பு பிடிக்கும் நபர்களின் அலைபேசி எண்கள் குறித்தும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் தயார் நிலையில் வைத்திட வேண்டும்.

கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி மழைநீரை சேமிப்பதற்கும்
அணைகள் மற்றும் ஆற்றின் கரையோரங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை தூர்வாரி
அவ்விடங்களை பலப்படுத்தி
ஆக்கிரமிப்புகள் மற்றும் தூர்வாருதல் தொடர்பாக எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் உரிய ஆவணங்களின் அறிக்கையை சமர்ப்பித்திட வேண்டும். மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் மற்றும் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் 24 மணிநேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறை அமைத்து கண்காணித்திட வேண்டும்.
என்பன உள்ளிட்டவை விவாதிக்கப்பட்டன.
கூட்டத்தில் போலீஸ் எஸ்பி சுஜித்குமார், கூடுதல் ஆட்சியர் ப்ரியா பங்கஜம், மாவட்ட வருவாய் அலுவலர் செல்வராஜ், மற்றும் இதரதுறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: