10 August, 2020 17:04

மதுரை

திருப்பரங்குன்றம் அருகே வளையன்குளத்தில் காய்ச்சல் நோய் கான சுகாதார ஆய்வாளர் களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா வலையங்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட மலேரிய அலுவலர் விக்டர் தலைமையில் வட்டார சுகாதார ஆய்வாளர் தங்கசாமி மற்றும் மருத்துவ குழுவினர் வேகமாக பரவி வரும் காய்ச்சலைக் கட்டுப்படுத்துவது குறித்து சுகாதார ஆய்வாளர்களுக்கான பயிற்சி முகாம் நடத்தினர்.

இதில் திருப்பரங்குன்றம் கல்லுப்பட்டி, கள்ளிக்குடி, கொட்டாம்பட்டி, மேலூர், வாடிப்பட்டி வட்டார பகுதியில் உள்ள சுகாதார ஆய்வாளர்கள் 87 பேர் பயிற்சி கலந்து கொண்டனர்.

இவர்களுக்கு காய்ச்சல் நோயை தடுப்பது குறித்தும் நோய் தடுப்பு மருந்துகளை வீடுகளில் தெளிப்பது குறித்தும் விளக்கம் அளிக்கப் பட்டன.

காய்ச்சல் நோய் குறித்து எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று மாவட்ட மலேரியா அலுவலர் விக்டர் ஆலோசனை வழங்கினார்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: