LatestNews
வறுமையால் மூதாட்டி கொலை..4 பேர் கைது
மூதாட்டி கொலை வழக்கில் திருப்பம். வறுமையால் மூதாட்டியை குடும்பமே கொன்றது அம்பலம்.. மகள் பேரன் பேத்தி உட்பட 4 பேர் கைது,, மதுரை மாவட்டம் திருமங்கலம் குண்டற்றில் நேற்று முன்தினம் எரிந்து கொண்டிருந்த நிலையில் 75 வயது மூதாட்டி உடல் மீட்டனர் இதுதொடர்பாக திருமங்கலம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர் இது குறித்து போலீஸார் கூறும்போது… விருதுநகர் மாவட்டம் சிவகாசியை அடுத்த விஜயகரிசல்குளம் தைச் சேர்ந்த கருப்பாயி வயது 75 இவரது கணவர் இறந்தபின் கருப்பாயி தன் குடும்பத்துடன் திருமங்கலத்தில் கடந்த 20 முன் குடியேறிவிட்டார் இரண்டாவது மகள் பழனியம்மாள் வயது 52 பூ கட்டும் தொழில் செய்துவருகிறார் பழனி அம்பாளுக்கு வைர மணி வயது 33 காளீஸ்வரி 27 என்ற மகள்களும் காளிதாஸ் வயது 30 என்ற மகனும் வைரமணி என் கணவரும் இவர்களுடன் உள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மூதாட்டி கருப்பாயி முதுமை காரணமாக நோய்வாய்ப்பட்டு படுத்த படுக்கையாய் இருந்து வந்தார், தற்பொழுது.கொரோனா காரணமாக இவர்களுக்கு வேலை இல்லை இதனால் குடும்பமே வறுமை நிலை ஏற்பட்டது இதனால் மூதாட்டிக்கு உரிய சிகிச்சை அளிக்க முடியவில்லை குடியிருந்த வீட்டுக்கு வாடகை கொடுக்க முடியாததால் வீட்டின் உரிமையாளர் காலி செய்யக் கூறினார். கடந்த சில நாட்களாக பழனியம்மாள் குடும்பத்தினர் வேறு வீடு பார்த்து வந்தனர். வேறு வீட்டுக்கு சென்றாலும் மூதாட்டி கருப்பாயி கவனிப்பதில் ஏற்படும் சிரமங்கள் இருப்பதால் அவரை கொலை செய்து விடலாம் என குடும்பத்தினர் முடிவு செய்தனர்.. இதன்படி மகள் பழனியம்மாள் பேரன் காளிதாஸ் பேத்தி காளீஸ்வரி மருமகன் வசந்தகுமார் ஆகியோர் தலையை அழுத்தி கொன்று பின் பெட்ரோல் ஊற்றி குண்டாற்றில் வைத்து பெட்ரோல் ஊத்தி எரித்தது தெரியவந்தது நேற்றிரவு பழனியம்மாள் காளீஸ்வரி காளிதாஸ் வசந்தகுமார்,,,, திருமங்கலம் நகர காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்
LatestNews
தீ விபத்து

வாடிப்பட்டிஅருகே
வைக்கோல்படப்பில்தீ:
வாடிப்பட்டி,ஏப்.10.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே நீரேத்தான் யூனியன்ஆபிஸ்சாலையில்
பாலன்நகரை சேர்ந்தவர் திருமலைராஜன் மனைவி மகேஸ்வரி இவரது வீட்டின்;
அருகில் வைக்கோல்படப்பு உள்ளது. இந்நிலையில் நேற்று திடீர் என்று மதியம்
அந்த வைக்கோல் படப்பில் தீபிடித்தது உடனே அக்கம்பக்கத்திலிருந்தவர்கள்
வந்து தீயை அணைத்தனர். ஆனால் காற்றுவீசஅது அதிகமாக பரவியது உடனே
தகவலறிந்த வாடிப்பட்டி தீயணைப்பு நிலைய அதிகாரி சதகத்துல்லா தலைமையில்
தீயணைப்புவீரர்கள் 2மணிநேரம் போராடி தீயை அணைத்தனர்.
3ஏக்கர்வைக்கோல்படப்பின் சேதமதிப்பு ரூ.30ஆயிரமாகும்.
LatestNews
முகக் கவசம் அணியாதோருக்கு அபராதம்….

மதுரையில் மாநகராட்சி அதிரடி:
மதுரை
*முக கவசம் அணியாத நபர்களுக்கு மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி* மதுரை மாநகராட்சி ஆணையாளர் விசாகன் உத்தரவின்பேரில் மதுரை மாநகராட்சி உட்பட்ட பகுதிகளில் முகக் கவசம் அணியாத நபர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது அதில் ஒரு பகுதியாக இன்று திருப்பரங்குன்றம் திருநகர் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் சுப்புராஜ் தலைமையிலான மாநகராட்சி அதிகாரிகள் முக கவசம் அணியாத வணிகர்கள் மற்றும் பொதுமக்களுக்கு ரூபாய் 200 வீதம் அபராதம் ரூபாய் 4200 அபராதமாக வசூலிக்கப்பட்டது . மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் சுப்புராஜ் நம்மிடம் தெரிவிக்கையில் வரும் வாடிக்கையாளர்கள் கடை உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் கட்டாயமாக முக கவசம் அணிந்திருக்க சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் கிருமிநாசினி கடை வாசல் முன் வைக்க வேண்டும் சாலையில் எச்சில் துப்பக் கூடாது எனவும் மீறி தப்பினால் ரூபாய் 500 அபராதம் விதிக்கப்படும் எனவும் என எச்சரிக்கை விடுத்துள்ளார் . மேலும் வெளியே வரும்போது மக்கள் முக கவசம் அணிந்து வெளியே வரவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார் மீறி கவசம் அணியாமல் வந்தால் கட்டாயமாக ரூபாய் 200 அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
LatestNews
பக்தர்கள் இன்றி கோயில் விழா…
மதுரை சித்திரை திருவிழா பக்தர்கள் பங்கேற்பு இன்றி நடைபெறும் என அறிவிப்பு :
கடந்த ஆண்டை போல கோவிலுக்குள் திருவிழா நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு:
மதுரை
கோயில் வளாக உட்புறத்தில் அனைத்து நிகழ்வுகளும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மீனாட்சி திருக்கல்யாணத்தை ஆன்லைனில் பக்தர்கள் தரிசிக்கலாம்.
கோவில் வளாகத்திலேயே கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் நடைபெறும்.
கொரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.