சாலைப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

மதுரை, ஆக.10-

மதுரை தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர் சங்கம் சார்பில் கோட்டப் பொறியாளர் அலுவலகம் முன்பு சாலைப்பராமரிப்பு பணியை தனியாருக்கு வழங்குவதை கைவிட்டு தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும். 41 மாத கால பணி நீக்க காலத்தை பணிக்காலமாக அறிவித்து முறைபடுத்த வேண்டும். சாலைப்பணியாளர் அனைவரையும் தொழில் நுட்ப கல்வித்திறன் பெறா ஊழியர்களாக அறிவித்திட வேண்டும். பணிகாலத்தில் இறந்துபோன சாலைப்பணியாளர்களின் வாரிசுகளுக்கு விதிமுறைகளை தளர்த்தி பணி வழங்க வேண்டும் என்று மாவட்டத் தலைவர் டி. மனோகரன் தலைமையில் நடைபெற்றது, மாவட்ட நிர்வாகிகள் நா.முருகன் – வா.மாரியப்பன் ஆகியயோர் முன்னிலை வகித்தார்கள், மாவட்ட இணை நிர்வாகிகள் மு.ரவிச்சந்திரன் , பெ.சந்திரசேகர் வரவேற்று பேசினார்கள், மாவட்டச் செயலாளர் வே.சோலையப்பன் கண்டன உரையாற்றினர், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் செ. மூர்த்தி, நெடுஞ்சாலைத்துறை ஊழியர் சங்கம் தலைவர் தை. ராஜு மற்றும் தோழமை சங்க நிர்வாகிகள் வாழ்த்தி பேசினார்கள், மாநில பொருளாளர்
இரா.தமிழ் நிறைவுறையாற்றினர், மாவட்டப் பொருளாளர் க.கணக்கன் நன்றி கூறினார்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: