வீட்டின் முன் விளக்கேற்றி கந்த சஷ்டி பார ாயணம்

சோழவந்தான் பகுதியில் வீட்டின் முன் வேல் கோலமிட்டு விளக்கேற்றி கந்தசஷ்டி படித்தனர்

சோழவந்தான்,ஆக.10-

கந்தசஷ்டி கவசத்தை பற்றி கருப்பர் கூட்டம் கொச்சைப்படுத்தி வெளியிட்டிருந்தனர் இதை கண்டித்து நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடத்தினர் இதுகுறித்து காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்டவர்களை குண்டர் சட்டத்தில் அடைத்தனர் அன்று முதல் முருக பக்தர்கள் பல்வேறு வழிபாடுகள் செய்து வந்தனர் நேற்று நாடு முழுவதும் வீட்டு வாசலில் வேல் கோலமிட்டு விளக்கேற்றி கந்தசஷ்டி படிக்க வேண்டுமென்று இந்து அமைப்புகள் கேட்டுக்கொண்டனர்.
இதன்பேரில் சோழவந்தான் பிஜேபி மாநில விவசாய அணி துணை தலைவர் மணி என்ற முத்தையா, தென்கரை அழகர்சாமி, முள்ளிப்பள்ளம் ஒர்க்ஷாப் முருகன், மன்னாடிமங்கலம் மாயாண்டி, திருவேடகம் ராஜா,தேனூர்,தச்சம்பத்து, ஊத்துக்குளி முருகேஸ்வரி,நகரி சிங்கராஜ், நெடுங்குளம் முத்துப்பாண்டி,திருவாலவாயநல்லூர் சுரேஷ்குமார், ஸ்ரீராமகிருஷ்ண ஆஸ்ரமம் குடியிருப்பு உள்பட பல்வேறு இடங்களில் வீட்டு வாசலில் கோலமிட்டு விளக்கேற்றி வைத்து கந்தசஷ்டி படித்தனர் பின்னர் வீட்டில் உள்ள குழந்தைகள் பெண்கள் பக்திபாடல்கள் பாடினார்கள் பூஜை செய்தனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: