கந்த சஷ்டி கவச வழிபாடு

*கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்திய கருப்பர் கூட்டத்தை கண்டித்து எஸ் எஸ் காலனி பிள்ளையார் கோவில் முன்பு கந்த விளக்கு ஏற்றிகந்த சஷ்டி கவசம் படித்து வழிபாடு*

தமிழகம் முழுவதும் ஞாயிறுக்கிழமையான இன்று முழுஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்கி வருகின்ற நிலையில், கருப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனல் கந்த சஷ்டி கவசத்தினை இழிவு படுத்தும் வகையில் வீடியோ வெளியிட்டதை கண்டித்து பாஜக மற்றும் இந்து அமைப்புகள் என பல்வேறு தரப்பினர் கண்டனங்களையும், போராட்டங்களும் நடத்தினர்.

இந்நிலையில் தமிழ் கடவுள் ஸ்ரீ முருகனின் கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்திய கருப்பர் கூட்டத்தை கண்டித்து
மதுரை எஸ் எஸ் காலனி பகுதியில் இந்து ஆலய பாதுகாப்பு குழு அமைப்பாளர்
சுவாமி சதா சிவானந்தா மற்றும் இந்து ஆலய பாதுகாப்பு குழு மேற்கு மாவட்ட துணை தலைவர் மதிவாணன் ஆகியோர் தலைமையில்
30க்கும் மேற்பட்டோர் விளக்கேற்றி கந்த சஷ்டி கவசம் படித்து முருகனை வழிபட்டனர்.

தீபா ரணை காட்டி பூஜைகள் நடத்திய பின்பு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினர்.

இதே போல், திருப்பரங்குன்றத்திலும் கோயில் முன்பாக கந்த சஷ்டி கவசம் படிக்கப்பட்டது.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: