கந்த சஷ்டி பாராயணம்

மதுரை (09.0820)
திருப்பரங்குன்றம்

திருப்பரங்குன்றத்தில் பாஜக சார்பில் நடைபெற்ற வேல் பூஜை கற்தசஷ்டி கவசம் பாடிய நிகழ்சியில் சமூக இடைவெளியின்றி 500 பேர் திண்டரை்.

மாநில நிர்வாகி சீனிவாசன் தற்போது கொரானா தொற்றிவிருந்து விடுபட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

*தமிழ் கடவுள் முருகனின் கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்திய கருப்பர் கூட்டத்தை கண்டித்து திருப்பரங்குன்றம் கோவில் முன்பு பாஜக சார்பில் வேல் பூஜை நடத்தி , பெண்கள் கந்த சஷ்டி கவசம் பாடி விளக்கு ஏற்றி வழிபாடு செய்கின்றனர்*

கருப்பர் கூட்டம் என்றார் யூடியூப் சேனல் கந்த சஷ்டி கவசத்தினை இழிவு படுத்தி பேசியது கடந்த மாதம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதற்கு தமிழகம் முழுவதும் பாஜக மற்றும் இந்து அமைப்புகள் என பல்வேறு தரப்பினர் கண்டனங்களையும் , போராட்டங்களும் நடத்தினர்.

இந்நிலையில் கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்திய கருப்பர் கூட்டத்தை கண்டித்து பாஜக சார்பாக இன்று தமிழகம் முழுவதும் வீடுதோறும் வேல் பூஜை நடத்தி வீட்டு வாசலில் திருவிளக்கேற்றி கந்த சஷ்டி கவசத்தை பாடி நூதன முறையில் போராட்டம் நடத்த பாஜக அழைப்பு விடுத்திருந்தது.

அந்த வகையில் முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் முன்பு பாரதிய ஜனதா கட்சி சார்பாக பாஜகவினர் சமூக இடைவெளியின்றி கூட்டமாக திரண்டனர்.

கந்தசஷ்டி கவசம் வேல் பூஜை செய்து , பெண்கள் திருப்பரங்குன்றம் கோயில் முன்புள்ள சன்னதி தெரு மற்றும் ரத வீதிகளில் திருவிளக்கேற்றி சிறப்பு வழிபாடு செய்தனர்.

இதில் இருநூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் அவர்களுடைய வீடுகள் முன்பு கடவுள் முருகன் திருவுருவ படத்திற்கு பூஜை செய்து விளக்கேற்றி பிரார்த்தனை செய்தனர். இதில் மாநில தலைவர் சீனிவாசன் , மாநகர் மாவட்ட தலைவர் சீனிவாசன் ஆகியோர் உள்பட 500 பேர் திரண்டனர், இதில் சமூக இடைவெளியில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மாநில தலைவர் சீனிவாசன் சமீபத்தில் கொரான தொற்றிலிருந்து சிகிட்சை பெற்று திரும்பினார் என்பது குறிப்பிடதக்கது.

அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் வகையில் திருப்பரங்குன்றம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்..செய்தியாளர் வி .காளமேகம் மதுரை மாவட்டம்

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: